சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.. காதலர் மட்டுமே ஒரே நம்பிக்கை.. கோயில் கோயிலாக சுற்றும் பிரபல நடிகை
கோயில் கோயிலாக சுற்றியும் எந்த பயனும் இல்லையே என நடிகை ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
Recommended Video
சென்னை: தொடர் தோல்விகளால் நடிகை ஒருவர் மிகுந்த மனவேதனையில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் அவர். ஒருகாலத்தில் தொட்டதெல்லாம் பொன்னானது. அதனால் நடிகை காட்டில் தொடர்ந்து அடைமழை பெய்து வந்தது.

தயாரிப்பாளர்கள் எல்லாம் நடிகையின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்தனர். டாப் ஹீரோக்களும், இயக்குனர்களும், நடிகையின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கித்தவித்தனர். ரசிகர்களோ திரையில் நடிகை தோன்றினாலே, ஆனந்தக்கூத்தாடினர்.
இதனால் தன்னை மட்டுமே நம்பி வந்த இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார் அவர். அந்த படங்களும் சூப்பர் ஜூப்லி கொண்டாட, நடிகையின் மார்க்கெட் இன்னும் எக்குத்தப்பாக எகிறியது.
சில ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே ருசித்து வந்த நடிகைக்கு இது போறாத காலம். சமீபகாலமாக அவரை தோல்விகள் துரத்திக்கொண்டிருக்கின்றன. தனியாக நடித்த படங்கள் தான் ஊத்திக்கொண்டன என்றால், பெரிய ஹீரோக்களுடன் நடித்த படங்களும் மண்ணை கவ்வின.
இதனால் கடவுள் மீது பாரத்தை போடுவோம் என நினைத்த நடிகை, கோயில் கோயிலாக சுற்றிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட மலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஆனால் எந்த சாமிக்கும் அவரது வேண்டுதல்கள் காதில் விழவில்லை போலும். தற்போது வெளியான படத்துக்கு கூட எதிர்மறையான ரிசல்ட் தான் கிடைத்திருக்கிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறாராம் நடிகை.
நடிகையின் கைவசம் ஒன்றிரண்டு படங்கள் தான் இருக்கின்றன. அதில் ஒரு படம் பெரிய ஹீரோவுடன் நடித்தது என்பதால், அதன் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறார். மற்றொரு பக்கம், தனக்கு மிகவும் நெருக்கமானவர் மூலம் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தில் நடிக்கிறார். இதுவும் ஊற்றிக்கொண்டால் நடிகையின் நிலை என்னாகுமோ என ரசிகர்களும் கவலையில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











