கணவருக்கு டிமிக்கி.. மாமனாரின் ஹோட்டலிலேயே வேறு நடிகருடன் தங்கிய நடிகை.. கையும் களவுமாக சிக்கிய கதை
சென்னை: கணவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மாமனாரின் ஹோட்டலிலேயே வேறு நடிகருடன் தங்கி நடிகை கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.
கடவுள் பெயர் கொண்ட இயக்குநரின் படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே நாகரீகமே இல்லாமல் நடித்து சர்ச்சை நாயகி என்று பெயர் எடுத்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. இப்படிப்பட்ட பறவை படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டு இவர் சர்ச்சை நாயகி மட்டும் இல்லை நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்ற பெயரையும் பெற்றார்.

இயக்குநருடன் காதல்: இப்படிப்பட்ட சூழலில் பெரிய நடிகருடன் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநரை காதலிக்க ஆரம்பித்தார். இயக்குநரின் குடும்பமும் சினிமாவை சேர்ந்ததுதான். சாதாரண குடும்பம் இல்லை பாரம்பரியமிக்க குடும்பம் என்ற பெயரையும் எடுத்த குடும்பம் அது. இயக்குநரின் தந்தை சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒருவர்.
திருமணம்: இந்தக் காதலுக்கு இயக்குநரின் தந்தை ஆரம்பமே எண்டு கார்டு போட பார்த்தார். ஆனால் நடிகையின் மீது தனது மகன் உயிரே வைத்திருப்பதன் காரணமாக அரைகுறை மனதோடுதான் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவும் செய்தார். ஒருவழியாக திருமணம் நடந்து இருவரும் தீவுக்கு ஹனிமூனும் சென்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என நடிகை அடம் பிடிக்க தன் மனதில் காதல் தடம் பதித்துவிட்டதால் இயக்குநரும் நடிகைக்கு பச்சைக் கொடி காண்பித்தார்.
ஆரம்பித்தது பிரச்னை: அப்போதிலிருந்துதான் பிரச்னையே ஆரம்பித்ததாம். அதாவது பெரிய இடத்து நடிகருடன் நடிக்கும்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆன் ஸ்க்ரீனில் பரவிய கெமிஸ்ட்ரி ஆஃப் ஸ்க்ரீனிலும் பரவ இருவரும் ஹோட்டல், பப் என சுற்ற ஆரம்பித்திருக்கின்றனர். ஏற்கனவே அந்த நடிகர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கபட்டவர் என்பதால் இயக்குநருக்கு கொஞ்சம் பயம் தொற்ற தொடங்கியுள்ளது. ஆனாலும் காதல் மனைவியிடம் இதுகுறித்து ஓபனாக பேச தயக்கம் காட்டியிருக்கிறார்.
பொறுக்காத அப்பா: சூழல் இப்படி இருக்க இயக்குநரின் தந்தைக்கோ விஷயம் தெரிய வந்து கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். இப்படியே விட்டால் இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த பாரம்பரிய பெயர் அடிபட்டு போய்விடுமே என நினைத்து நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆனால் நடிகையோ அய்யோ நீங்கள் நினைக்கும்படி எல்லாம் இல்லை. அவர் எனக்கு ஒரு நண்பர் மட்டுமே என சொல்லியிருக்கிறார்.
கையும் களவுமாக பிடித்த அப்பா: சரி பேச்சுவார்த்தை நடத்தினால் இப்படித்தான் பிளேட்டை திருப்புவார் என்று சுதாரித்த இயக்குநரின் அப்பா ஓடு மீன் ஓட உறுமீன் வர காத்திருக்குமாம் கொக்கு என்பதற்கேற்ப காத்திருந்திருக்கிறார். ஒருநாள் நடிகையும், நடிகரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார்களாம். ஆனால் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களில் இயக்குநரின் அப்பாவும் ஒருவராம். அவர்கள் இரண்டு பேரும் அங்கு தங்கியது இவரின் காதுக்கு வர நேராக அவர்கள் தங்கியிருந்த அறை கதவை தட்டிவிட்டாராம். திறந்து பார்த்தால் நடிகையும், நடிகரும் இருந்தார்களாம்.
நடிகையை கையும் களவுமாக பிடித்தவுடனே இயக்குநரின் அப்பா தன்னுடைய மகனுக்கு ஃபோனை போட்டு விஷயத்தை சொல்ல இயக்குநரின் தலையில் இடியே இறங்கியிருக்கிறது. இருந்தாலும் எப்போதும் அமைதியாக இருக்கும் இயக்குநரும் தனக்கு வந்த அதிர்ச்சியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் டீசண்ட்டாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாராம். தற்போது இந்த கிசுகிசு கோடம்பாகத்தில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











