கவர்ச்சிப் புகைப்படங்களால் தொடர் சர்ச்சை.. இனி அடக்கி வாசிக்க முடிவெடுத்த பிரபல நடிகை!

கவர்ச்சிப் புகைப்பட சர்ச்சையில் இருந்து தப்பிக்க கொஞ்சகாலம் அமைதி காக்க முடிவெடுத்துள்ளாராம் இந்த நடிகை.

சென்னை: தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் தனது புதிய பட வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற பயத்தில், கொஞ்சகாலம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம் பிரபல நடிகை.

தமிழின் முன்னணி நடிகையாக இருந்தபோதே இயக்குநரைத் திருமணம் செய்து கொண்டவர் இந்த நடிகை. ஆனால், காதல் திருமணம் கசப்பில் முடிந்ததால், மீண்டும் நடிப்பிற்கே திரும்பினார்.

இரண்டாம் இன்னிங்சை அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களிலேயே ஆரம்பித்தார். ஆனால், திருமணத்திற்குப் பின்னும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தவர், தனது அடுத்தடுத்த படங்களில் அதிரடி காட்டத் தொடங்கினார்.

கவர்ச்சியோ கவர்ச்சி:

கவர்ச்சியோ கவர்ச்சி:

அவர் நடித்து வரும் உடை பெயரில் உருவாகி வரும் படத்தின் போஸ்டர், திரைத்துறையினரையே அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் கவர்ச்சியோ கவர்ச்சியாக இருந்தது. அதோடு அடுத்தடுத்து தனது புகைப்படங்களால் சர்ச்சைகளில் சிக்கினார் நடிகை.

அறிவுரை:

அறிவுரை:

இதனால் அவர் மீதான எதிர்மறை விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் அதிகமாயின. இதனைக் கவனித்த அவரது நலம் விரும்பிகள், ‘இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள உனக்கு இது நல்லதல்ல' என அவருக்கு அறிவுரை கூறினர்.

புதிய முடிவு:

புதிய முடிவு:

இதனால் நிலைமையை உணர்ந்த நடிகை, சில காலம் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளாராம். பழைய சர்ச்சைகளை மக்கள் மறக்கும்வரை, சத்தமில்லாமல் இருக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். இதனால் தான் சமீபகாலமாக அவர் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் எதையும் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடவில்லை என்கின்றனர்.

இது தான் திட்டம்:

இது தான் திட்டம்:

முதல் இன்னிங்ஸ் தான் காதலால் பாதியிலேயே நின்று போனது. இரண்டாவது இன்னிங்சிலாவது தமிழின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்வது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X