திரும்பத் திரும்ப இந்தத் தப்பை செய்யாதே.. பிரண்ட்ஸ் அட்வைஸ்.. புதிய வாய்ப்புகளை இழக்கும் பேய் நடிகை!
நலம் விரும்பிகளின் அறிவுரையால் புதிய பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் பேய்ப்பட நடிகை.
சென்னை : புதுமுக நடிகர்களுடன் நடிக்க வேண்டாம் என்ற நலம் விரும்பிகளின் அறிவுரையால் புதிய பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் பேய்ப்பட நடிகை.
அறிமுகப் படத்திலேயே பேயாக நடித்து மக்களை மிரள வைத்தவர் இந்த நடிகை. பார்க்க அழகாகவும் இருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், பெரும்பாலும் நடிகையை அணுகியவர்கள் எல்லாம் அறிமுக நாயகனை வைத்து இயக்கினார்கள்.

இதனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு அமையவில்லை. கை நிறைய படங்கள் இருந்தும், ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் வெற்றி பெறவில்லை. மக்களிடையே அதிகம் இவர் பேசப்படவும் இல்லை.
தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை, தற்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்.
எனவே, இனி அறிமுக நாயகர்களுடன் நடிக்க வேண்டாம் என அவரது நண்பர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனராம். இதனால் நடிகையும் கதை சொல்ல வருபவர்களிடம் அறிமுக நாயகர்கள் நடிக்கும் படமென்றால், கதையில் இவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டாலும், கனமான கதாபாத்திரமாக இருந்தாலும்கூட, கறாராக நோ சொல்லி விடுகிறாராம்.
இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக புதிய படவாய்ப்புகள் பலவற்றை நடிகை இழந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











