மங்களகரமான நடிகை வாய்ப்பில்லாமல் காணாமல் போனதற்கு அவர்தான் காரணமாம்.. அதிர வைக்கும் தகவல்!
சென்னை: மங்களகரமான அந்த நடிகை திடீரென படங்களில் காணாமல் போனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மலையாள தேசத்தை பூர்விகமாக கொண்ட அந்த நடிகை, அந்த ஊரு சினிமாவில் முதலில் அறிமுகமானார். துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.
எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகருடன் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக ஜோலியை தொடங்கினார்.

மார்க்கெட்டை தக்க வைக்க
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட அவருக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.

காணாமல் போனார்
நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

ஆன்ட்டி போன்று..
கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

நடிப்புக்கு லீவு
அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

காரணம் இதான்
இந்நிலையில் நடிகை திடீரென சினிமாவில் இருந்து மாயமானதற்கு காரணம் இதுதான் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது அம்மணி வைத்திருந்த மேனேஜர்தான் அவரது கேரியரில் லாரி லாரியாக மண்ணை அள்ளி கொட்டியதாம்.

ஒருவாரம் கழித்து..
அதாவது நடிகையின் கால் ஷீட் கேட்டு இயக்குநரோ, தயாரிப்பாளரோ போன் செய்தால் மனுஷன் எடுக்கவே மாட்டாராம். போன்கால்களை எடுத்து பதில் சொல்லாமல் ஒரு வாரம் கழித்து சாவகாசமாய் கால் செய்து என்னவென்று கேட்பாராம்.

அப்செட்டில் நடிகை
இதனால் தான் பல பட வாய்ப்புகளை இழந்து நடிகை நடனம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம். மேனேஜர்தான் தன்னுடைய சினிமா கேரியருக்கு வேட்டு வைத்தது என்பதை அறிந்து அப்செட்டில் உள்ளாராம் நடிகை.

பார்ப்போம்..
இந்த தகவல் பரவியதால் நடிகையின் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனராம். பார்ப்போம் இனிமேலாவது நடிகைக்கு வாய்ப்புகள் வந்து திரையில் வருவாரா என்று..


Click it and Unblock the Notifications











