திருமணமான ஹீரோவுடன் கள்ளத்தொடர்பு வைக்க துடியாய் துடிக்கும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் திருமணமான நடிகருடன் நெருங்கி உறவாட ஏங்கித் தவிக்கிறாராம்.
கவர்ச்சி காட்டாமலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதை நிரூபித்த நடிகை அவர். ஆனால் மார்க்கெட் சரியத் துவங்கியதும் கவர்ச்சிக்கு தாவி விட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து தற்போது ஸ்டெடியாகி உள்ளார். அவருக்காக ஒரு ஹீரோ உருகிக் கிடக்க நடிகையோ இந்த பழம் புளித்துவிட்டது போன்று அவரை கண்டுகொள்வது இல்லை. அதனால் அவர் பாட்டிலும், கையுமாக உள்ளார்.

நடிகை
நடிகைக்கு படபடவென்று வளர்ந்து நிற்கும் ஹீரோ மீது ஒரு கண். நிகழ்ச்சி ஒன்றில் அந்த ஹீரோ நடிகையுடன் ஜாலியாக பேச அவர் மயங்கிவிட்டார். அதில் இருந்து ஹீரோவை அடைய வேண்டும் என்ற முடிவோடு உள்ளார். ஹீரோவின் செல்போன் எண்ணை வாங்கி சேட்டிங் செய்தார். ஆனால் அவர் மசியவில்லை.

பிடித்துள்ளது
ஹீரோ மசியாததை அடுத்து தனது அரைகுறை புகைப்படங்களை அனுப்பி வைத்தார். அதை பார்த்து பதறிய ஹீரோ எனனம்மா இது என்று கேட்க, இல்லை தெரியாமல் அனுப்பி விட்டேன் என்று சமாளித்திருக்கிறார் நடிகை. பின்னர் பேச்சு வாக்கில் புகைப்படங்களில் நான் எப்படி இருந்தேன் என்று நைசாக கேட்க ஹீரோவோ கடுப்பாகி என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜாலி
ஹீரோவுக்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரிந்தும் அவரை அடைய நினைக்கிறார் நடிகை. ஹீரோ விலகிப் போகப் போக நடிகைக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது. ஒரு கட்டத்தில் வெட்கத்தை விட்டு ஹீரோவிடம் தனது ஆசையை கூறியுள்ளார். உங்களுக்கு குடும்பம் இருப்பது தெரியும். உங்களுடன் சில காலம் ஜாலியாக இருக்க விரும்புகிறேன், என்னை தொட்டால் தான் என்ன என்று வெளிப்படையாக கூற ஹீரோ அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஆசை
என்ன செய்தாலும் ஹீரோ தன்னை தொட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்று நடிகைக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் இந்த ஆளுடன் எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என்ற வெறியும் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் ஹீரோவின் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கே நடிகை சென்றுள்ளார். அங்கு ஹீரோ கேரவனுக்குள் இருந்ததை நடிகை தெரிந்து கொண்டார்.

முடியாது
கேரவனுக்குள் நுழைந்த நடிகை ஹீரோ படுத்திருந்ததை பார்த்ததும் நேராக அவர் மீது பாய்ந்துவிட்டாராம். ஹீரோவுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். நடிகையை அறைய கையை ஓங்கிய ஹீரோ பின்னர் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நீங்க ஒரு நல்ல நடிகை, இப்படி பண்ணாதீங்க. நல்ல கதை கிடைத்தால் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறினாராம். இந்த கசமுசா நடந்தபோது கேரவனுக்குள் வேறு ஒரு நடிகரும் இருந்திருக்கிறார். நடிகையின் செயலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











