நடிகை காதலிப்பது வாரிசு நடிகரைத் தானாமே.. ஆனா, அவர் தான் அப்போவே நோ சொல்லிட்டாரே!
ஜில் நடிகை வாரிசு நடிகரைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை, வாரிசு நடிகரைத் தான் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பல நடிகைகளுக்கு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி செய்து கொடுத்த சிறப்பு பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு உண்டு. அதன்படி கடந்தாண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானவர் இந்த நடிகை.

நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே அவர் தொழிலதிபர் ஒருவரைக் காதலித்ததாகக் கூறப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி சக போட்டியாளர் ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகை, மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம். தற்போது அவர் காதலிப்பது பிரபலமான வாரிசு நடிகரைத் தானாம். ஏற்கனவே சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என காதலே வேண்டாம் என அந்த நடிகர் வாழ்ந்து வருகிறார். ஆனால் நடிகை ஒரு தலையாக அவரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருவருமே ஏறக்குறைய தமிழில் ரீ எண்ட்ரியாகத் தான் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் காதல் கத்தரிக்காய் என இருவரும் பேரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அவரது நலம் விரும்பிகள் அறிவுரை கூறி வருகின்றனர்.
ஆனால் அதனை காதில் போட்டுக் கொள்ளாத நடிகை, தன் காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளார். விரைவில் காதலர் பெயரையும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











