பிரமாண்ட படத்தில் இருந்து இளம் நடிகரை நீக்க வைத்த நடிகை?
சென்னை: பிரபல நடிகை ஒருவர் தனது முன்னாள் காதலரால் ஒரு படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
பிரபல நடிகையும், பல திறமைகள் கொண்ட நடிகரும் காதலித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் எடுக்கும் பிரமாண்ட படத்தில் அந்த நடிகர் நடிப்பதாக இருந்தது.

இயக்குநர் பிரபல நடிகையை தொடர்பு கொண்டு தன் படத்தில் நடிக்குமாறு கேட்டதற்கு அந்த ஆள் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்றாராம். இதையடுத்து இயக்குநர் அந்த திறமையான நடிகரை தன் படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.
இந்நிலையில் நடிகையும் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நீங்க மொத்தமாக டேட்ஸ் கேட்கிறீர்கள், அப்படி எல்லாம் கொடுக்க முடியாது. நான் ஏற்கனவே ரொம்ப பிசி என்று கூறி நடிகை அந்த பிரமாண்ட படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இந்த பொண்ணு பேச்சை கேட்டு அந்த பையனை நீக்கிவிட்டோமே என்று இயக்குநர் ஃபீல் பண்ணியது தான் மிச்சம். நடிகை இப்படி கன்டஷன் போட்டதற்கு பின்னால் ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது.
அது சரி, யாருடன் நடிக்க வேண்டும், நடிக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் இடத்தில் உள்ளார் நடிகை. மனதிற்கு பிடிக்காமல் நடித்தால் சரியாக வராது என்பது அவருக்கு தெரியாதா என்ன?


Click it and Unblock the Notifications











