பிளேபாயை திருமணம் செய்யும் நடிகை: நல்லா இருந்தால் சரி
சென்னை: நடிகை ஒருவர் திருமணம் செய்யப் போகும் நபர் பிளேபாய் ஆவார்.
அழகிப் பட்டம் வென்ற நடிகை ஒருவருக்கு திருமணம் நடக்கப் போகிறது. அவர் தனது காதலரை தான் திருமணம் செய்ய உள்ளார். அந்த காதலர் பெரும் பணக்காரர் ஆவார்.
அவர் பணக்கார தொழில் அதிபர் மட்டும் அல்ல பிளேபாயும் கூட.

காதல்
நடிகையும், அந்த தொழில் அதிபரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் அடுத்த கட்ட முடிவு எடுத்துள்ளனர். இருவரும் சேர்ந்து புது வீட்டில் குடியேறியுள்ளனர். திருமணத்திற்கு முன்பே குடும்பமாகிவிட்டனர்.

பிளேபாய்
நடிகையின் வருங்கால கணவரான அந்த தொழில் அதிபர் பிளேபாய் என்று பெயர் எடுத்தவர். பிரச்சனையில் சிக்கி சிறைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நடிகைக்கும், அவருக்கும் எப்படி செட் ஆனது என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

நடிகை
நடிகை தன்னுடன் சேர்ந்து நடித்த வாரிசு நடிகர் ஒருவரை காதலித்தார். அவர்கள் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். நடிகை ரொம்ப சீரியஸாக காதலித்தார். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அந்த நடிகர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் நடிகையும் திருமதி ஆகப் போகிறார்.

நடிப்பு
நடிகையின் வருங்கால கணவர் பிளேபாய் என்றாலும் திருந்தி வாழ்ந்தால் சரி என்கிறார்கள் ரசிகர்கள். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பை தொடர்வாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











