இடுப்பை கிள்ளிய ரசிகர்: வலியில் அலறிய நடிகை
கோவா: கோவாவில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் புஸு புஸு நடிகை ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த சமயம் பார்த்து சில்மிஷ ரசிகர் ஒருவர் நடிகையின் இடுப்பை கிள்ளிவிட்டாராம்.
புஸு புஸு நடிகை பழம்பெரும் நடிகையின் மகனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு கோவா கடற்கரையில் நடந்துள்ளது. அப்போது அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது. நடிகை கேரவனுக்கு சென்றபோது அவரிடம் ஆட்டோகிராப் கேட்டு ரசிகர்கள் திரண்டனர்.
சரி ஆட்டோகிராப் தானே என்று நினைத்து ரசிகர்கள் அருகில் வந்தார் நடிகை. உடனே அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஆளாளுக்கு முந்தியடித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சமயம் பார்த்து ரசிகர் ஒருவர் நடிகையின் இடுப்பை கிள்ள அவர் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதையடுத்து யூனிட் ஆட்கள் ஓடி வந்து நடிகையை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கடற்கரையில் படப்பிடிப்பு என்றாலே பதறுகிறாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











