கூடவே சுத்தும் செவ்வாழை.. நடிகரின் சிக்னலுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகை!

By Staff

சென்னை: சினிமா உலகில் நடிகர்கள் செய்கிறார்களோ இல்லையோ, பெரும்பாலான நடிகைகள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போது சரி, பல விருது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் சரி கூடவே அவர்களின் அம்மா அல்லது அப்பா, அல்லது உடன் பிறந்தவர்களையோ அல்லது உறவினர்களையோ அழைத்து வருவார்கள். இதற்கு காரணம் சினிமாவில் வேலை செய்பவர்கள் பலரது கோர முகங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது நடிகைகள் என்றைக்காவது தனியாக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டால், அன்றையாக படத்தில் சம்பந்தப்பட்ட யாராவதால் அவர்களுக்கு பாலியல் தொல்லை நேர்ந்து விடுமோ என்ற அச்சம் நடிகைகளின் குடும்பத்தினருக்கு உண்டு.

சில மாதங்களுக்கு முன்னர் கூட 90களின் தொடக்கத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்த நடிகை, தனது அம்மா தன்னுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வராத நாளில், அந்த படத்தின் இயக்குநர் தன்னிடம் தனி அறையில் அத்துமீறி நடந்து கொண்டார் என்று கூறினார். இப்படியான சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதால்தான், பல நடிகைகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார்களாம்.

நடிகர் சிக்னல்: அப்படித்தான் நடிகை ஒருவரும் தனது அம்மாவுடன் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறாராம். இதில் என்ன பிரச்னை என்றால், நடிகையின் உடன் நடித்த நடிகர் ஒருவர் நடிகைக்கு சில சிக்னல்களைக் கொடுத்துள்ளார். ஆனால் நடிகைக்கு நடிகரின் சிக்னலுக்கு பதில் அளிக்க முயற்சி செய்ய ஆசை இருந்தும் செய்ய முடியவில்லையாம். இது இப்படி இருக்க, ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த நடிகையின் அம்மா, அருகில் ஒரு வேலை என புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Actress Mother Slamms Actress Try to Relationship With Actor Cinema Gossip

டிவிஸ்ட்: சில மணி நேரங்களில் வந்துவிடுகிறேன் எனச் சென்றதால், இதுதான் வாய்ப்பு என நடிகையும் நடிகரின் கேரவனுக்கே சென்றுள்ளார். இங்குதான் இருக்கு டிவிஸ்ட் எனக் கூறுவதுபோல, நடிகையின் அம்மா, நடிகையை பார்த்துக்கச் சொல்லி நடிகைக்கே தெரியாமல் புரெடக்‌ஷன் சைடில் இருக்கும் ஒருவரிடம் கூறியுள்ளார். அவரும் நடிகை, நடிகரின் கேரவனுக்குள் சென்றதைக் கூறியதும் பதறி அடித்து ஓடிவந்த நடிகை அம்மா, நேராக நடிகரின் கேரவனுக்கே சென்றுவிட்டார்.

கையும் களவுமாக: கேரவன் கதவைத் தட்டிப் பார்த்து வெகு நேரமாக கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்கள். அதன் பின்னர் கதவைத் திறந்ததும் இருவரும் செம கேஷ்வுலாக இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்கள். ஆனால் நடிகையின் முகத்தில் இருந்த கொஞ்சம் பதற்றத்தை வைத்து, கேரவனுக்குள் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நடிகையின் அம்மா, நடிகையை அழைத்துக் கொண்டு உடனே வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாராம். இந்த தகவல் தற்போது சினிமா உலகில் உலா வந்து கொண்டு உள்ளது. இனிமேல் நடிகை நடிப்பாரா? இல்லையா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும் என பேசுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X