எனக்கேவா.. அக்ரிமென்ட்ல அதுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டாதான் கால்ஷீட்டே.. நம்பர் நடிகை அதிரடி!

சென்னை: அதுக்கு ஓகே சொன்னால் தான் படத்திலேயே நடிப்பேன் என நம்பர் நடிகை அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.

கோடி கோடியாக சம்பளம் வாங்கும் சில முன்னணி நடிகைகள் படத்தில் நடித்து கொடுத்துவிட்டால் கடமை முடிந்தது என கம்பியை நீட்டி விடுகின்றனர்.

படம் தொடர்பான எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. இந்த விவகாரம் நீண்ட நாட்களாகவே கோலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

சம்பளத்தை பிடிப்போம்

சம்பளத்தை பிடிப்போம்

அண்மையில் முன்னணி நடிகை தான் நடித்த விளையாட்டின் பெயர் கொண்ட படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதனால் கடுப்பான தயாரிப்பு புரமோஷன் நிகழ்ச்சியிலேயே அவரை கடுமையாக சாடியது. புரமோஷனுக்கு வராவிட்டால் சம்பளத்தை பிடிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செம டென்ஷன்

செம டென்ஷன்

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கோடி கோடியாக சம்பளத்தை வாங்கி குவிக்கும் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் செம டென்ஷன் ஆகிவிட்டாராம் முன்னணி நம்பர் நடிகை.

அதுக்கு ஓகே சொன்னாதான்

அதுக்கு ஓகே சொன்னாதான்

என்னுடைய அந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லி அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டால்தான் உங்களின் படத்திலேயே நான் நடிப்பேன் என ஒப்பந்தத்தின் போதே தயாரிப்பு தரப்பிடம் தெளிவாக சொல்லிவிட முடிவு செய்திருக்கிறாராம் நடிகை. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் நினைப்பதை தான் செய்வேன் என்றிருக்கிறாராம் நம்பர் நடிகை.

வாய்ப்புகள் இழப்பு

வாய்ப்புகள் இழப்பு

அப்படி புரமோஷனுக்கு வந்து தான் தீர வேண்டும் என்றால் அப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேசி வருகிறாராம் உச்சத்தில் இருக்கும் நம்பர் நடிகை. ஏற்கனவே தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வருகிறார் நடிகை. இதனால் பல பட வாய்ப்புகளை இழந்துவிட்டார்.

நடிகையின் நட்பு வட்டம்

நடிகையின் நட்பு வட்டம்

இதேபோல் உச்ச நடிகரின் படத்திலும் அவருடன் டூயட் பாட வேண்டும் என்று இயக்குநருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறாராம். தற்போது இந்த விஷயத்திலும் தனது பிடிவாதத்தை காட்டி இருக்கும் வாய்ப்பையும் இழக்கப்போகிறார் என்கின்றனர் நடிகையின் நட்பு வட்டாரத்தினர். இருந்தாலும் இவ்வளவு அடம் ஆகாதும்மா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X