என்ன ஒரு புத்திசாலித்தனம்.. சம்பளக் குறைப்பில் பிரபல ஹீரோயின் தந்திரம்.. ஆச்சரியத்தில் தயாரிப்பு!

By

சென்னை: சம்பள குறைப்பு விஷயத்தில் பிரபல ஹீரோயின் செய்த தந்திரத்தை அடுத்து தயாரிப்பாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

தமிழில் அந்த ஹீரோயின் நடித்து ஒரே ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அது, தெலுங்கில் இருந்து இறக்குமதியான படம்.

அடுத்து கைதி நடிகருடன் நடித்திருக்கிறார், ஒரு படத்தில். அதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

ரவுண்ட் வருவார்

ரவுண்ட் வருவார்

பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்தப் படம் ரிலீஸ் ஆனால், தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள். இதற்கிடையே தமிழில் சில படங்களுக்கு அவருடன் பேசி வருகின்றனர். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் என்பதால் லக்கி ஹீரோயின் என்கிறார்கள் அவரை.

நடத்திய சோதனை

நடத்திய சோதனை

கர்நாடகாவில் இருந்து டோலிவுட்டுக்கு வந்த நடிகையான அவர், இப்போது சில டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார் அங்கு. இவரது வீட்டில், சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும் கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

பிறகு அந்த விஷயம் அப்படியே அமுங்கி போனது. டோலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை, இந்த வருட ஆரம்பத்தில் வெளியான படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து 20 சதவிகிதம் உயர்த்தினார் சம்பளத்தில். அதாவது ஒரு கோடியே 20 லட்சம் என உயர்த்தினார்.

நஷ்டம் வரும்

நஷ்டம் வரும்

அதைக் கொடுக்க, தயாரிப்பாளர் தயாராக இருந்தனர். ஆனால், கொரோனா மொத்த சினிமா துறையையும் முடங்கிவிட, தயாரிப்பாளர்கள் நொந்து போய் இருக்கின்றனர். 50 சதவிகித பார்வையாளர்களுடன் தியேட்டர் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், கண்டிப்பாக நஷ்டம் வரும் என்ற நிலையிலேயே படங்களை வெளியிட உள்ளனர்.

பாக்கியை கொடுங்க

பாக்கியை கொடுங்க

இதனால், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் 20 சதவிகிதத்தை குறைக்க கேட்டுக் கொண்டனர். தெலுங்கு தயாரிப்பாளர்களும் அப்படியே. அதன்படி பல டாப் ஹீரோக்கள், நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். இந்த ஹீரோயினிடம் கேட்டபோது, '20 பர்சன்ட் ஏத்தியிருந்தேன்ல, அதை மட்டும் குறைச்சுட்டு பாக்கியை கொடுங்க' என்றாராம்.

என்னத்தை குறைச்சார்?

என்னத்தை குறைச்சார்?

அதாவது அவர் இந்த வருட தொடக்கத்தில் வெளியான படத்துக்கு வாங்கிய அதே தொகையைதான் கேட்கிறாராம். இதுல என்னத்தை குறைச்சிருக்கார்? என்று ஆச்சரியமடைந்த அந்த தெலுங்கு தயாரிப்பு, கவுன்சிலில் நடிகை மீது புகார் கொடுக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X