பட வாய்ப்புக்காக ஆடையை துறந்த நடிகை: பாவம், ஒர்க்அவுட் ஆகல

By Siva

சென்னை:நடிகை ஒருவர் பட வாய்ப்பு பெற இந்த அளவுக்கு இறங்கிவிட்டாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

உயரம், அழகு, நடிப்பு திறமை உள்ளவர் அந்த நடிகை. அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் படம் மூலம் தான் நடிகையாக அவதாரம் எடுத்தார். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவருக்கு மவுசு இல்லை.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அம்மணி நன்றாக நடித்தாலும் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வருவது இல்லை. குறிப்பாக வெயிட்டான கதாபாத்திரங்களை அவரை நம்பி இயக்குநர்கள் கொடுக்க தயாராக இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது ஹீரோயினாகவே அவரை பல இயக்குநர்கள் பார்க்கிறார்கள். இதையும் சவாலாக எடுத்து நடித்து வருகிறார் அம்மணி.

பிகினி புகைப்படம்

பிகினி புகைப்படம்

பட வாய்ப்பு வரவில்லை என்றால் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்புகிறார்கள். இந்நிலையில் நடிகையோ சற்று வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அதாவது அடிக்கடி பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

அம்மணி ஆடையை துறந்து பிகினிக்கு மாறியதே இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தான் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவர் என்ன தான் பிகினி புகைப்படங்களை வெளியிட்டாலும் பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவரை கண்டுகொள்வதாக இல்லை.

பாராட்டு

பாராட்டு

நடிகை ஒவ்வொரு முறையும் பிகினி புகைப்படம் வெளியிடும்போது ரசிகர்கள் அவரின் அழகை பார்த்து ஆஹா, ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஆனால் அவர் எதை எதிர்பார்த்து இப்படி எல்லாம் செய்கிறாரோ அது மட்டும் நடப்பதாக இல்லை. பிகினி அணிந்தால் மட்டும் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துவிடுவோமா என்பது போன்று உள்ளனர் இயக்குநர்கள்.

ஆசை

ஆசை

அவர் பெரிய நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அம்மணி ஆசைப்படுகிறார். ஆனால் அவர் என்ன செய்தாலும் ஒர்க்அவுட் ஆக மாட்டேன் என்கிறது. அவரும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்தாலும் பலன் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X