கஷ்டப்படாமல் காசு சம்பாதிக்க முடிவு செய்த இளம் நடிகை
Recommended Video

சென்னை: இளம் நடிகை ஒருவர் கஷ்டப்படாமல் சம்பாதிக்க நினைக்கிறாராம்.
இளம் நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை விட பார்ட்டிகளுக்கு சென்று என்ஜாய் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். கோலிவுட் வட்டாரத்தில் அவரை பார்ட்டி பொண்ணு என்று சொல்லும் அளவுக்கு அம்மணி இருக்கிறார்.
படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வருகின்றது. அதே சமயம் ஒரேயொரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவும் அழைக்கிறார்கள். இதில் அம்மணிக்கு குத்தாட்டம் போடத்தான் பிடித்துள்ளதாம்.

கால்ஷீட்
ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டால் மொத்தமாக கால்ஷீட் கொடுக்க வேண்டும். குத்தாட்டம் என்றால் 2 அல்லது 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாலே போதும். மேலும் குத்தாட்டம் போட அதிக சம்பளம் வேறு கிடைக்கிறது.

ஹிட்
அம்மணிக்கு கவர்ச்சி காட்டி ஆடுவதில் பிரச்சனை இல்லை. அதனால் எதற்காக கஷ்டப்பட்டு ஹீரோயினாக நடித்துக் கொண்டு. படம் ஓடாவிட்டாலும் ஹீரோயின் மீது பழி போடுவார்கள். இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. குத்தாட்டம் போட்டோமா, காசை வாங்கி என்ஜாய் செய்தோமா என்று இருக்க முடிவு செய்துவிட்டாராம்.

குத்தாட்டம்
நடிகை கஷ்டப்படாமல் குத்தாட்டம் போட தீர்மானித்துள்ளதை அடுத்து அவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். ஹீரோயின் சான்ஸ் பெற அவரவர் ஏதேதோ செய்கிறார்கள். ஆனால் இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கு என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

வருத்தம்
குத்தாட்டம் போடுவதை நிறுத்திவிட்டு ஹீரோயினாக நடிங்க என்று கோரிக்கை விடுத்து வரும் ரசிகர்கள் தான் கவலை அடைந்துள்ளார்கள். அம்மணியின் பெயரை கெடுக்க வேறு யாரும் தேவையே இல்லை அவரே போதும்.


Click it and Unblock the Notifications











