'லிவ் இன்' வதந்தி-புல்லட் டிரெய்ன் 'டிராப்'!

எந்தப் பக்கம் போனாலும், அந்த வழி அடைத்திருந்தால் எப்படி இருக்கும்?. அப்படிப்பட்ட நிலையில்தான் உள்ளார் பிரியா மணி. தமிழில் பருத்தி வீரன் அவருக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்தது, விருதையும் தேடிக் கொடுத்தது.
ஆனால் அந்தப் பாதை தவறு என்று கிளாமருக்கு மாறினார் பிரியா மணி. பருத்தி வீரன் தனக்கு கொடுத்த ஏற்றத்தைப் பற்றி பேசக் கூட அவர் மறுத்தார். இதன் விளைவு, அதீதமாக காட்டிய கவர்ச்சியால் ரசிகர்களுக்கு திகட்டிப் போய் விட்டது, விளைவு, இன்று கையில் படம் ஏதும் இல்லாத நிலை.
இருப்பினும் மனம் தளராமல், தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வந்தார் பிரியா மணி. இடையில், மணிரத்தினத்தின் ராவணன் படம் கிடைத்தது. பெரும் புகழ் பெறலாம் என்று நினைத்து விக்ரமின் தங்கை வேடத்தில் நடித்தார். ஆனால் படம் பிரியா மணிக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது, எந்த மாற்றத்தையும் தரவில்லை.
இந்த நிலையில், தெலுங்கில் புக் ஆகியிருந்த புல்லட் டிரெய்ன் படத்திலிருந்து பிரியாவை தூக்கி விட்டனராம். இதனால் பெரும் அப்செட் ஆகியுள்ளார் பிரியா.
இதற்கிடையே, பிரியா மணிக்கும் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் தீவிர காதல் என்றும், அவருடன் லிவ் இன் உறவை கடைப்பிடித்து சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. இதுவும் பிரியா மணியை அப்செட் செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











