தனியா போய் டீலை முடிச்சிட்டு வரேன்.. நம்பர் நடிகையின் மாஸ்டர் ஸ்கெட்ச்.. மாட்டிக்கிட்ட மாஸ் நடிகர்?
சென்னை: மற்றவர்களை அனுப்பினால் வேலை சரியாக எதிர்பார்த்தபடி முடியாது என்பதால் நம்பர் நடிகையே டைரக்ட்டாக களத்தில் குதித்து விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி அதிர்ச்சியை கொடுத்துள்ளன். மாஸ் நடிகர் கண்டிப்பாக நமக்கு எதிராக எதையும் செய்ய மாட்டார் என தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு எதிராதான் எல்லாத்தையும் செய்வேன் என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் என பகீர் கிளப்புகின்றனர்.
பக்கத்து ஸ்டேட் நடிகர் வந்து மண்டையை கழுவிய நிலையில், மாஸ் நடிகரின் தோழிக்கும் அதுவே சரியென பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதனால், இந்த விவகாரத்தை தானே கையில் எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டுகிறேன் எனக் கூறி விட்டாராம்.

இவ்வளவு நாள் எதிர்த்து பேசியது எல்லாம் வீணாய் போய்விடுமே என மாஸ் நடிகர் மண்டையை சொறிய உங்களுக்கு எதிரா இருக்குறவங்க கூட யாரெல்லாம் கூட்டு சேர்ந்திருக்காங்க பாருங்க என நடிகை புத்திமதி சொல்ல ஒரு வழியாக நடிகர் ஆடு தலையை ஆட்டுவது போல ஆட்டிவிட்டார் என்கின்றனர்.
முழுசா நனைஞ்சாச்சு: எப்படியெல்லாம் அசிங்கப்படாமல் கெத்தாகவும் மாஸாகவும் இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு இருந்த நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பற்றிய மேட்டர்களை கசியவிட்டு நடிகை தான் டோட்டல் டேமேஜ் செய்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் உள்ளுக்குள்ளே புகைந்துக் கொண்டிருக்க நடிகர் முழுசா அந்த நடிகையை நம்பிக்கொண்டிருக்கிறார் என்கின்றனர்.
நடிகையின் மாஸ்டர் ஸ்கெட்ச்: இந்த முறை எப்படியாவது எதிர் தரப்பை மண்ணைக் கவ்வ வைத்து விட வேண்டும் என்கிற முடிவுடன் நடிகை இருப்பதாக கூறுகின்றனர். மாஸ் நடிகருடன் கடைசி வரை யாரும் சேராமல் எதிர் தரப்பில் ஏகப்பட்ட டம்மி பீஸ்களை சேர்த்து விட்டதே கடைசியாக பிரம்மாஸ்திரத்தை இறக்க நடிகை போட்ட மாஸ்டர் பிளான் தான் என்கின்றனர்.
நானே டீல் பண்றேன்: நடிகைக்கும் ஒரே விஷயத்தை பண்ணி ரொம்பவே போர் அடித்து விட்டதாம். இந்நிலையில், இப்பவே களத்தில் குதித்து தன்னை நிரூபித்து தனது நண்பரை எப்படியாவது வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்பதற்காக மேலிட விவகாரத்தை நானே தனியா சென்று டீல் பண்ணிட்டு வரேன் என கிளம்பிச் சென்றுள்ளார் என்கின்றனர். பல விஷயங்களை கஷ்டப்பட்டு முட்டுக் கொடுத்து வரும் நடிகரின் தொண்டர்கள் இந்த விஷயம் தெரிந்த பின்னர் எப்படி ஜால்ரா தட்டப் போகின்றனர் என்பதை பார்க்கவே வேடிக்கையாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











