ஷூட்டிங்கில் ஓவராக ஜொள்ளு விட்ட இயக்குநர்.. பாதியிலேயே ஜூட் விட்ட அங்காடி நடிகை!

படப்பிடிப்பின் போது புதுமுக இயக்குனர் ஓவராக ஜொள்ளு விட்டதால், பாதியிலேயே எஸ்கேப் ஆகிவிட்டாராம் அங்காடி நடிகை.

சென்னை: இயக்குநரின் சீண்டல்கள் அதிகமானதால், ரீ எண்ட்ரி படத்தை முடிக்காமல் இழுத்தடித்து வருகிறாராம் அங்காடி நடிகை.

அறிமுகப் படத்திலேயே நல்ல நடிகை எனப் பெயரெடுத்தவர் அங்காடி நடிகை. அடுத்தடுத்து அவருக்கு அமைந்த படங்களும் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்ததால், நடிப்பு ராட்சசியாக தமிழ் சினிமாவில் அவர் பாராட்டப்பட்டார்.

ஆனால், நடிகருடன் காதல், இயக்குநருடன் திருமணம் என ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியதால், சில காலம் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். இடைவெளிக்குப் பின்னர் தமிழில் அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

டார்ச்சர்:

டார்ச்சர்:

நடிகையின் பிரச்சினைகள் ஊரே அறிந்த படியால், நடிகைக்கு மறுவாழ்வு தருவதாக நினைத்துக் கொண்டு ஓவராக அலப்பறை கொடுத்துள்ளார் இயக்குநர். நாளுக்கு நாள் இயக்குநரின் ஜொள்ளு டார்ச்சர் அதிகமாகவே, படத்தை முடித்துக் கொடுக்காமலேயே கழண்டு கொண்டார் நடிகை.

பாதியில் நின்ற படம்:

பாதியில் நின்ற படம்:

திறமையான நடிகை என்பதால் அவருக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் அமைந்தன. தற்போது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார் நடிகை. ஆனால் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு நிலைமை அப்படியில்லை. அவரது முதல் படமே பாதியிலேயே நின்றது.

பதிலடி:

பதிலடி:

நடிகையின் பெயரால் தாங்களும் பிரபலம் ஆகலாம் என்ற கனவில் இருந்தனர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்த பலர். ஆனால் அவர்களின் கனவு பலிக்கவில்லை. நடிகை மீது இது தொடர்பாக உரிய இடத்தில் புகார் அளிக்கலாம் என்றால், பதிலுக்கு நடிகையும் இயக்குநரின் அத்துமீறல்களை எடுத்து விடுவார் என்ற அச்சம் படக்குழுவிற்கு உள்ளது.

படக்குழு நிலை:

படக்குழு நிலை:

இதனால் அதிகாரப்பூர்வமாக இது குறித்து புகார் அளிக்கவும் முடியாமல், பட வேலைகளை முடிக்கவும் இயலாமல் திருடனுக்கு தேள் கடித்தது போன்ற நிலையில் இயக்குநர் உள்ளார். நடிகையாக பார்த்து மனமிறங்கி பட வேலைகளை முடித்துக் கொடுத்தால் தான், தங்களின் எதிர்காலமே என்கின்றனர் பாவப்பட்ட படக்குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X