அட்ஜஸ்ட் பண்ண நான் ரெடி: ஹீரோக்களுக்கு தூதுவிடும் நடிகை
சென்னை: பிரபல நடிகை ஒருவர் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்காக ஒரு முடிவு செய்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வந்து கொண்டிருக்கிறவர் அந்த நடிகை. தற்போதும் கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை.

ரூட்டை மாற்றிப் பார்க்கிறேன் என்று கூறி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துப் பார்த்தார். அதுவும் சரிபட்டு வரவில்லை. இதையடுத்து பழையபடி முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடுவது என்று முடிவு செய்துள்ளாராம்.
நான் பெரிய நடிகையாக்கும், எனக்கு நிறைய சம்பளம் கொடுத்தால் தான் பிரபல நடிகர்களின் படத்தில் நடிப்பேன் என்று சொல்லும் நிலையில் அவர் இல்லை. அதனால் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்.
சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன், உங்கள் படங்களில் நடிக்க சான்ஸ் கொடுங்க என்று பிரபல நடிகர்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











