டேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு
Recommended Video

சென்னை: பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் அட்ஜஸ்ட் செய்யலாம் என்ற முடிவில் டான்ஸ் நடிகை உள்ளாராம்.
அழகான இளம் நடிகை அவர். வட நாட்டில் இருந்து வந்தவருக்கு மடமடவென பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் நடனம் ஆடும் அழகை பார்த்தே பல ஹீரோக்கள் அசந்துவிட்டனர்.
அந்த காரணத்தினாலேயே அம்மணியை பல ஹீரோக்கள் தங்கள் படங்களுக்கு பரிந்துரை செய்தனர்.

சவால்
அம்மணிக்கு பட வாய்ப்புகள் வந்த குவிந்த நிலையில் லைட்டா தலைக்கனமும் ஏறியது. சர்ச்சை நடிகையை விரட்டிக் காட்டுகிறேன் பார் என்று சவால்விட்டார். இதை கேட்டு சர்ச்சை நடிகை ஒன்றுமே சொல்லவில்லை. அவருக்கு தெரியாதா, இது போன்று பேசுபவர்கள் எத்தனை பேரை பார்த்திருப்பார்.

வருத்தம்
அம்மணிக்கு டூ பீஸ் போட்டு படுகவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரை தேடி வரும் கதாபாத்திரங்களோ இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்க வேண்டியவை. இதனால் கவர்ச்சி கதாபாத்திரம் கொடுக்கும்படி அவர் இயக்குனர்களுக்கு தூதுவிட்டார். இதற்கிடையே சீனியர் நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

பணம்
அம்மணிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தாலே நடிக்க சில நடிகைகள் தயாராக உள்ளனர். இந்நிலையில் தனக்கு பட வாய்ப்பு குறைந்ததற்கான காரணத்தை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே சம்பளம் தான் பிரச்சனை போன்று என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

பார்த்துக் கொள்ளலாம்
அதிக சம்பளம் வாங்குவதால் தான் பட வாய்ப்பு குறைகிறது என்றால் அட்ஜஸ்ட் செய்ய அம்மணி தயாராக உள்ளாராம். அதாவது சம்பளத்தை தற்போதைக்கு குறைத்துக் கொள்ள அவர் ரெடி. சில காலம் சம்பள விஷயத்தில் அடம்பிடிக்காமல் விட்டுக் கொடுத்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











