»   »  பலான கதைகள்... திரும்ப ஏமாறத் தயாரா இல்ல... விழித்துக்கொண்ட நடிகை!

பலான கதைகள்... திரும்ப ஏமாறத் தயாரா இல்ல... விழித்துக்கொண்ட நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்ற படத்தின் டீம் மீண்டும் இணைகிறது. இந்த டீமில் இருந்து நடிகை மட்டும் கழன்று விட்டாராம்.

முந்தைய படத்தின் தொடர்ச்சி போலத்தான் தயாராகிறதாம் இந்தப் படம். அந்த காதல் ஜோடி ஒரு பங்களாவில் தங்குவதும் அதில் பேய் இருப்பதும்தான் கதையாம். எனவே அந்த நடிகையையே மீண்டும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் முந்தைய படத்துக்கு கதை சொன்னபோது அடல்ட் விஷயங்களையெல்லாம் மறைத்து கதை சொல்லியதால் படம் வெளியானதும் நடிகை எரிச்சல் அடைந்துவிட்டாராம்.

Actress refused adult movie

படத்தின் கன்டெண்டே தெரியாமல் 'படத்துல ப்ளட், ஆக்‌ஷன் நிறைய இருக்கு. அதான் ஏ சர்டிஃபிகேட் கொடுத்துருக்காங்க...' என்ற ரீதியில் பேட்டி கொடுத்து அசிங்கப்பட்டதை நடிகை மறக்கவில்லையாம். எனவே கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமே உங்க சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

நடிகையின் மனதை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.

English summary
That adult comedy film's heroine has avoided acting in that team's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X