அட்ஜஸ்ட் பண்ண மறுத்த ஹீரோயின்: ஆளையே மாற்றிய இயக்குனர்

By Siva

Recommended Video

அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் ஆளையே மாற்றிய இயக்குனர்

சென்னை: ஹீரோயின் ஒருவர் அட்ஜஸ்ட் பண்ண மறுத்ததால் ஆளையே மாற்றியுள்ளார் பிரபல இயக்குனர்.

பிரபல இயக்குனரின் இரண்டாம் பாகம் படத்தில் நடிக்க முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஹீரோவும் உலகம் முழுவதும் பிரபலமானவர்.

பெரிய படம் என்பதால் நடிகை உடனே ஒப்புக் கொள்ளவில்லை.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

அந்த இயக்குனரின் படத்தில் நடிக்க நடிகை 2 நிபந்தனைகள் விதித்தார். அதாவது முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், கால்ஷீட்டை வீணடித்தால் பிற படங்களை அட்ஜஸ்ட் செய்துவிட்டு வந்து நடிக்க மாட்டேன். கொடுத்த கால்ஷீட்டை வீணடித்தால் நான் ஒப்புக் கொண்டுள்ள படங்களில் நடித்து விட்டு தான் உங்கள் படத்தில் வந்து நடிப்பேன் என்று நடிகை அந்த இயக்குனரிடம் கூறியுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

முத்தத்திற்கு பெயர் போன ஹீரோவின் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியது முதல் அதிர்ச்சி. கால்ஷீட் விஷயத்தில் அட்ஜஸ்ட் பண்ணும் பேச்சுக்கே இடம் இல்லை என்றது இரண்டாவது அதிர்ச்சி. இதை எதிர்பார்க்காத இயக்குனர் இந்த நடிகை நம் படத்திற்கு ஒத்து வர மாட்டார் என்று ஆளை மாற்றிவிட்டார்.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

அந்த இயக்குனர் எடுத்த பிரமாண்ட படத்தை இழுத்தடித்ததை பார்த்து தான் நடிகை கால்ஷீட் விஷயத்தில் கறாராக பேசியுள்ளார். இதையடுத்து பிசியாக இல்லாத ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நடிகையின் மார்க்கெட் டல்லாக உள்ளதால் கால்ஷீட்டை வீணடித்தாலும் பிரச்சனை இல்லை.

நன்மை

நன்மை

2 நிபந்தனை விதித்த நடிகையோ கோலிவுட்டில் ரொம்பவே பிசி. மேலும் அவர் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த இயக்குனரின் படத்தில் ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இருக்காது. அந்த படத்தில் நடிகை நடிக்காதது குறித்து அறிந்த அவரின் ரசிகர்கள் இதுவும் நன்மைக்கே என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X