இழுத்து போர்த்திக்கறதெல்லாம் இனி வேலைக்கே ஆகாது.. மீண்டும் கவர்ச்சிக்கு தாவிய பிரபல நடிகை!

மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவது என பிரபல நடிகை முடிவெடுத்து விட்டாராம்.

Recommended Video

அந்த மாரி படம் தான் கிடைக்குது புலம்பும் நடிகைகள்

சென்னை: இழுத்துப் போர்த்திக் கொண்டு குடும்பப்பாங்காக நடிப்பதெல்லாம் இனி வேலைக்கே ஆகாது என மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கே மாறியுள்ளார் பிரபல நடிகை.

உண்மையிலேயே வெள்ளாவியில் வைத்து வெளுத்தது மாதிரி இருக்கும் நடிகை அவர். ஆரம்பத்தில் கவர்ச்சி நாயகியாகத் தான் தமிழ் சினிமாவில் களமிறங்கினார். முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார்.

ஆனால் இடையில் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல, நம்பர் நாயகியைப் பார்த்து தானும் இனிமேல் நடித்தால் அது மாதிரி தான் நடிப்பேன் என அதிரடியாக அறிவித்தார்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

அவரது ஆசைக்குத் தகுந்தபடி அப்போது நல்ல படங்கள் சில அவரது கவனத்திற்கு வந்தது. உடனடியாக அதில் நடிக்க சம்மதித்தார். எதிர்பார்த்ததைப் போலவே அப்படங்கள் நடிகைக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

ரோல்மாடல் நடிகை

ரோல்மாடல் நடிகை

எனவே இனி அதே ரூட்டில் பயணிப்பது என அவர் முடிவெடுத்தார். ஆனால் தொடர்ந்து அதே மாதிரி படங்கள் அவருக்கு அமையவில்லை. யாரைப் பார்த்து இவர் முடிவெடுத்தாரோ, அவரே லேசாக தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

இதனால் தானும் ரூட்டை மாற்ற நடிகை முடிவெடுத்து விட்டார். இனி வரும் படங்கள் கவர்ச்சி அதகளம் பண்ண அவர் ரெடியாகி விட்டார். இதனை மறைமுகமாகக் கூறுவது போல், புதிதாக கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

நடிகை மகிழ்ச்சி

நடிகை மகிழ்ச்சி

அப்புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியதால், நடிகை மகிழ்ச்சியில் இருக்கிறார். எனவே இனி வரும் படங்களில் நிச்சயம் நடிகையின் கவர்ச்சி சற்றுத் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஓவராகக் கவர்ச்சி காட்டி உள்ள பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரிதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X