ஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் ஹீரோக்களிடம் மட்டும் சிரித்து சிரித்து பேசுகிறாராம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்து இயக்குநர்களுக்கு தலைவலி கொடுப்பது இல்லை.

அவர் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். அவர் தற்போது மூன்று மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முன்னணி நடிகர்கள் அந்த நடிகையை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை. சொல்லப் போனால் அவர் வேண்டாம் என்று சில ஹீரோக்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்களாம். இது எல்லாம் தெரிந்தும் அம்மணி தனது நிலைமை மாறும் என்று நம்பிக்கையுடன் உள்ளார்.
படப்பிடிப்பு தளங்களுக்கு வந்தால் பொசுக்கு பொசுக்கென்று கோபப்படுவாராம் அம்மணி. படக்குழுவிடம் முசுடாக இருக்கும் அவர் ஹீரோக்களிடம் மட்டும் சிரித்து சிரித்து பேசுகிறாராம். அப்படி இருந்துமே ஹீரோக்கள் அவரை பரிந்துரை செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை படக்குழுவிடம் ஒரு விதமாகவும், ஹீரோக்களிடம் வேறு விதமாகவும் பழகுவது திரையுலகினருக்கு பிடிக்கவில்லை. அவரின் இந்த குணத்தாலும் அவரின் கெரியர் பிக்கப் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
ஹீரோக்களுக்கு மட்டும் ஐஸ் வைத்தால் போதுமா, மற்றவர்களிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டாமா?. பெரிய, பெரிய நடிகைகள் எல்லாம் அனைவரிடமும் சகஜமாக பழகும்போது இந்தம்மா இன்னும் வளரவே இல்லை அதற்குள் இப்படியா என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











