முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பலே நடிகை
சென்னை: நடிகை ஒருவர் காதல் வாழ்க்கை பற்றி தெரிவித்திருப்பது அவரை பற்றி நன்கு தெரிந்தவர்களை வியக்க வைத்துள்ளது.
இளம் நடிகை ஒருவர் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இருவரும் ஜோடியாக பார்ட்டிகளுக்கு செல்கிறார்கள், வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள்.

அவர்கள் காதலிப்பது ஊருக்கே தெரியும். திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்வதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இந்நிலையில் நடிகையோ தான் கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டதாகவும் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் எப்பொழுதுமே எதையும் தனியாக செய்து பழகிவிட்டதால் திருமணத்திலும் ஆசை இல்லை என்கிறார். அவர் சொல்வதை பார்த்தால் நடிகரை காதலிக்ககவே இல்லை என்பது போன்று அல்லவா இருக்கிறது என்கிறார்கள் அவரை தெரிந்தவர்கள்.
காதல் விஷயத்தில் நடிகை மாற்றி மாற்றி பேசுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக காதலிக்கும் பிரபலங்கள் அதை மறைப்பார்கள். ஆனால் நடிகையோ காதலனுடன் பப்ளிக்காக சுற்றிக் கொண்டு காதலை ஏற்க மறுக்கிறார்.
சினிமாவிலும் சரி, காதலிலும் சரி, அவர் கணக்கே புரியவில்லையே என்று ரசிகர்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications