செமபோதை.. காதலி பற்றி எக்குதப்பாக உளறல்.. ஆடியோ பதிவு செய்த நண்பர்.. பீதியில் பிரபல நடிகையின் காதலர்

போதையில் நடிகை பற்றி உளறிய ஆடியோ வெளியில் வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் காதலர்.

Recommended Video

Gossip | Lead Role Actress 3rd Breakup

சென்னை: போதையில் காதலியான முன்னணி நடிகையைப் பற்றி எக்குத்தப்பாக உளறிய ஆடியோ ரிலீசாகி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் இயக்கத்திற்குப் பேர் போன காதலர்.

முன்னணி நடிகை காதலில் இருப்பது ஊரறிந்த விசயம் தான். அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது தான் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரும், காதலரும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர்.

அவ்வப்போது தங்களது காதலை உறுதி செய்யும் வகையில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்தாண்டாவது திருமண சேதி சொல்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. நடிகை அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால், அடுத்தாண்டும் திருமணம் செய்து கொள்வது சந்தேகமே என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

காதலரின் உளறல்

காதலரின் உளறல்

இது ஒருபுறம் இருக்க, நடிகையின் இந்தக் காதலுக்கும் இப்போது ஒரு ஆபத்து வந்திருக்கிறதாம். அதாகப்பட்டது காதலர் ஒருமுறை மதுபோதையில் நண்பர் ஒருவரிடம் நடிகையைப் பற்றி எக்குத்தப்பாக உளறி இருக்கிறார். இளம் நடிகை ஒருவரின் நண்பர் அதனை ஆடியோவாக பதிவு செய்து விட்டார்.

அச்சத்தில் காதலர்

அச்சத்தில் காதலர்

இப்போது அந்த ஆடியோ வெளியே வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் காதலர். நிச்சயம் அதைக் கேட்டால் நடிகை தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்கிறார்கள். அதனால் தான் காதலருக்கு பயமாம்.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வியடைந்தவர் நடிகை. சரி இந்தக் காதலாவது வெற்றி பெற்றால் சரி என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, அதற்கும் ஒரு பிரச்சினை வந்து விட்டது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. பார்ப்போம் நடிகை என்ன முடிவெடுக்கிறார் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X