நடிகரை மனதில் வைத்து மாப்பிள்ளைகளை தட்டிக்கழிக்கும் நடிகை: புலம்பித் தள்ளும் பெற்றோர்
சென்னை: எங்களுக்கு இப்பவே கண்ணை கட்டுதே என்று நடிகை ஒருவரின் பெற்றோர் புலம்புகிறார்களாம்.
நல்ல அழகும், திறமையும் உள்ள நடிகை அவர். அவர் வாழ்வில் காதல் வந்து போயுள்ளது. அவர் காதலித்த ஒருவர் தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவர். மேலும் நடிகையின் பெயர் வேறு ஒரு பிரபலத்துடனும் சேர்ந்து அடிபட்டது.

அதன் பிறகும் நடிகையும், பிரபல நடிகர் ஒருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த நடிகர் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகைக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். நடிகைக்கு வெயிட்டான மாப்பிள்ளை வேண்டுமாம். அதாவது பெரிய ஆளாக பார்த்து திருமணம் செய்ய நடிகைக்கு ஆசையாம். அவர் கேட்கும் அளவில் உள்ள மாப்பிள்ளை யாரும் கிடைக்காமல் பெற்றோர் தான் பாவம் அல்லாடுகிறார்களாம்.
நடிகை ஒரு பெரிய இடத்து பிள்ளையின் பார்வைக்காக வேறு காத்திருக்கிறாராம். அவர் ஓகே சொன்னால் அவரை திருமணம் செய்யும் ஐடியாவில் உள்ளாராம் நடிகை. ஆனால் அந்த பெரிய இடத்து பிள்ளைக்கு நடிகையை மணக்க விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
பெரிய இடத்துப் பிள்ளை மசிவது போன்று இல்லை என்பது நடிகைக்கும் தெரியாமல் இல்லை. இருப்பினும் ஒரு வேளை நடந்துவிட்டால் நல்லது தானே என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
இதற்கிடையே நடிகை கூறிய கன்டிஷன்களுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக யாராவது சிக்க மாட்டாரா என்று அவரின் பெற்றோர் உள்ளார்களாம். இந்த புள்ளைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நாங்கள் நிம்மதியாக இருப்போம். ஆனால் நடப்பேனா என்கிறதே என்று அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளுகிறார்களாம்.
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைகளை ஏதாவது குறை சொல்லி வேண்டாம் என்கிறாராம் நடிகை. அதனால் தான் பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











