அரசனை நம்பி புருசனை கைவிட்ட பிரபல நடிகை.. இப்போது புலம்பி என்ன பயன்?
பிரபல நடிகரால் புதிய படவாய்ப்புகளை இழந்து சோகத்தில் இருக்கிறார் பிரபல நடிகை.
சென்னை: வேர்ல்ட் நாயகனால் புதிய பட வாய்ப்புகளை இழந்த ஸ்வீட் நடிகை புலம்பி வருகிறார்.
இடைவெளி விட்டு விட்டு நடித்த போதும், ஸ்வீட் நடிகைக்கு தமிழில் நல்ல மார்க்கெட்தான். முன்னணி நடிகர்களின் படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், வேர்ல்ட் நாயகனின் இரண்டாம் பாகம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. மிகப்பெரிய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என மிகப்பெரிய கூட்டணி என்பதால் உடனடியாக ஓகே சொல்லி விட்டார் நடிகை.
வேகவேகமாக பட வேலைகளும் ஆரம்பமானது. இதனால் நடிகை வேறு சில புதிய பட வாய்ப்புகளையும் வேண்டாமென்று சொல்லி விட்டார். இந்த ஒரு படத்தில் வெயிட்டான கேரக்டர் என்பதால் அதை வைத்து மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என அவர் மனக்கணக்கு போட்டுள்ளார்.
ஆனால், நடந்ததே வேறு. நடிகர் திடீரென தீவிர அரசியலில் இறங்கி விட்டதால், பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. மீண்டும் எப்போது பட வேலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை.
இதனால், அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக, இந்த ஒரு படத்தை நம்பி, கிடைத்த மேலும் சில புதிய பட வாய்ப்புகளை இழந்து விட்டோமே என புலம்பி வருகிறார் நடிகை.


Click it and Unblock the Notifications











