»   »  மசாஜ் செய்ய போன இடத்தில் சிறப்பு பூஜை செய்த நடிகை: குவியும் பட வாய்ப்புகள்

மசாஜ் செய்ய போன இடத்தில் சிறப்பு பூஜை செய்த நடிகை: குவியும் பட வாய்ப்புகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்றெழுத்து நடிகை பட வாய்ப்புகளுக்காக வெளிநாட்டில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளாராம்.

மூன்றெழுத்து நடிகை ஒருவர் கோலிவுட், டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். அதன் பிறகு அம்மணியுடன் பெரிய ஹீரோக்கள் நடிக்க மறுக்கவே அவர் குறைந்த பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தினார்.

Actress's special pooja for movie offers

ஒரு சமயத்தில் கையில் படம் இல்லா நிலை கூட வந்தது. வேறு ஒரு திரையுலகிற்கு பெரிய எதிர்பார்ப்புடன் சென்று போன வேகத்தில் திரும்பி வந்தார்.

இந்நிலையில் அழகை மெயின்டெய்ன் செய்ய வெளிநாட்டுக்கு சென்று மசாஜ் செய்துள்ளார். மசாஜ் பார்லரில் வேலை செய்யும் ஒரு பெண் எங்க ஊருக்கு வெளியே இருக்கும் அந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்தால் பட வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்றாராம்.

அம்மணியும் காலம் தாழ்த்தாமல் அங்கு சென்று பூஜை செய்துவிட்டு ஊர் திரும்ப அட என்ன ஆச்சரியம் கை நிறைய படங்கள். அவர் இந்த ஆண்டு முழுவதும் பிசியோ பிசிங்க.

English summary
Buzz is that an actress did some special pooja abroad for movie offers. Now, she is flooded with movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil