நிர்வாண புகைப்படங்கள்.. மிட் நைட்டிலும் தொடர்ந்த ஆபாச தொல்லை.. திடீரென அப்படியொரு முடிவெடுத்த நடிகை?
சென்னை: பிரபல நடிகை ஒருவருக்கு தொடர்ந்து அவரது மார்ப் செய்யப்பட்ட நிர்வாண போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து மர்ம நபர் ஒருவர் ஆபாச தொல்லை கொடுத்து வந்துள்ளாராம்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை சைபர் கிரைமிலும் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை நடிகைக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பி வருவது யாரென்றே கண்டு பிடிக்க முடியவில்லையாம்.
இந்த விவகாரம் குறித்து தனது கணவர் நடிகருக்கு தெரிவிக்கவும் மனைவி நடிகை தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது திடீரென அப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சீக்கிரமே திருமணம்: இளம் நடிகையாக சினிமாவில் நடித்து அசத்திக் கொண்டிருக்கும் போதே அந்த பிரபல நடிகருடன் காதலில் விழுந்த அந்த நடிகை உடனடியாக திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னமும் அந்த நட்சத்திர தம்பதியினருக்கு குழந்தையே பிறக்கவில்லை. ஆனாலும், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் திருமணத்துக்கு பிறகும் அந்த நடிகை தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், சோஷியல் மீடியா அப்யூஸில் அந்த நடிகை சிக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
கணவரை விட்டுட்டு வா: சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வந்த அந்த நடிகைக்கு சமீப காலமாக மர்ம நபரிடம் இருந்து தப்பு தப்பான மெசேஜ்களும், திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிற புரபோஸல்களும் குவிந்து வருகின்றன.
ஆரம்பத்தில் நெட்டிசன்கள் சும்மா விளையாடுறாங்க என நினைத்த நடிகைக்கு தொடர்ந்து அந்த ஐடியில் இருந்து பர்சனல் டிஎம்களில் ஆபாச மெசேஜ்களும் கணவரை விட்டுட்டு வா நாம ஜாலியா இருக்கலாம். உன்னை நான் நல்லா பார்த்துக்குறேன் என டார்ச்சர்கள் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

நிர்வாண வீடியோக்கள்: அந்த ஐடியை நடிகை பிளாக் செய்தாலும், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என நடிகை எங்கே போஸ்ட் போட்டாலும், வேறு வேறு ஐடிக்களில் வந்து நடிகையை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த அந்த மர்ம நபர், ஒரு கட்டத்தில் டார்க் வெப்பில் மார்ப் செய்யப்பட்ட நடிகையின் மார்பிங் நிர்வாண வீடியோக்களையே அவருக்கு அனுப்பி பிளாக் மெயிலிலும் ஈடுபட ஆரம்பித்து விட்டதால் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.
நடிகை எடுத்த அதிரடி முடிவு: சினிமாவில் செம பிசியாக நடித்து வரும் தனது கணவரிடம் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் நடிகையே சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
தனது செல்போன் நம்பர் உள்ளிட்ட பர்சனல் விஷயங்களை உடனடியாக மாற்றிய அந்த நடிகை சமூக வலைதளத்துக்கு சின்ன பிரேக் விட்டு விட்டு நிம்மதி அடைந்து விட்டாராம். கூடிய சீக்கிரமே அந்த மர்ம நபர் சைபர் போலீஸில் சிக்கிவிடுவார் என்பதால், மன நிம்மதிக்காக கொஞ்ச காலம் அந்த பக்கம் போகாமல் பிரேக் எடுத்து வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











