ஹய்யோ, ஹய்யோ, கவர்ச்சி கடலையே தெறித்து ஓட வைத்த இயக்குநர்
ஹைதராபாத்: கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளாராம் இளம் நடிகை ஒருவர்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. நன்றாக தமிழ் பேசத் தெரிந்த அவருக்கு தெலுங்கும் நன்றாகத் தெரியும். மூன்று பெயர் வைத்திருக்கும் நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக இந்த நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டாராம் நடிகை. அவரின் கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டியிருப்பதால் முடியாது என்று கூறிவிட்டாராம் நடிகை. உங்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கிறோம் என்று கூறியும் மறுத்துவிட்டாராம்.
நடிகை சும்மாவே பயங்கரமாக கவர்ச்சி காட்டி நடிப்பார். நிஜ வாழ்க்கையிலும் அம்மணி படுகவர்ச்சியாக உடை அணிவார். தனது படுகவர்ச்சி புகைப்படங்களை அவரே சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.
அவரே முடியாது என்றால் அந்த கதாபாத்திரத்தின் கவர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications











