ரொமான்ஸ் காட்சிகளுக்கு நோ நோ சொல்லும் நம்பர் நடிகை.. காரணம் என்ன தெரியுமா?

பிரபல நடிகை இனி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார்.

By Staff

சென்னை: மிகப்பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு கறாராக நோ சொல்லி விடுகிறாராம் பெரிய நம்பர் நடிகை.

சமீபத்திய படங்களில் தனியொரு நாயகியாக வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் பெரிய நம்பர் நடிகை. தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அவர், இரண்டு வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதில் வெற்றி நாயகன் படமும் ஒன்று.

முதல் பாகத்தில் திரைக்கதையைப் போலவே பெரிதும் பேசப்பட்டது வெற்றிப்பட நடிகர் மற்றும் நம்பர் நடிகையின் காதல் கெமிஸ்ட்ரி. இதனாலேயே இரண்டாம் பாகத்திலும் அவரையே நாயகியாக்க இயக்குநர் முடிவு செய்தார்.

முதல் பாகத்தில் தாராளம்:

முதல் பாகத்தில் தாராளம்:

ஆனால் முதல் பாகம் வெளியான போது, இப்படி தனியொரு நாயகியாக நடிகை அதிகம் பேர் பெறவில்லை. இதனால் படத்தில் பாடல் காட்சிகளில் தாராளம் காட்டியிருந்தார். ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை.

நோ ரொமான்ஸ்:

நோ ரொமான்ஸ்:

நாயகியின் ரேஞ்சே வேறு என்றாகி விட்டது. அதோடு நடிகை தற்போது காதலிலும் இருக்கிறார். இதனால், இனி வரும் படங்களில் அதிகம் நாயகர்களுடன் நெருக்கம் காட்டுவதில்லை என முடிவு செய்துள்ளாராம். இதனை சம்பந்தப்பட்ட இயக்குநரிடமும் அவர் வெளிப்படையாகவே கூறிவிட்டாராம்.

இயக்குநரின் திட்டம்:

இயக்குநரின் திட்டம்:

வேறு நடிகையாக இருந்தால் இன்னேரம் அவருக்குப் பதில் இவர் என போட்டோவை மாற்றி இரண்டாம் பாகத்தை எடுத்து விடலாம். ஆனால், நடிகையின் நிலை அப்படியில்லை. நடிகைக்காகவே படம் பார்க்க ஒரு கூட்டம் வரும். எனவே, இயக்குநர் புதிய திட்டம் ஒன்று போட்டுள்ளாராம்.

2 நாயகிகள்:

2 நாயகிகள்:

அதாவது நடிப்பிற்கு நம்பர் நடிகையையும், கவர்ச்சிக்கு வெடுக் வெடுக் இடுப்பழகியையும் நடிக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம். அதனால் இரண்டாம் பாகத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். வெடுக் வெடுக் நடிகையும் கவர்ச்சியோடு நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் அசத்தக் கூடியவர். எனவே படத்தில் நிச்சயம் அவருக்கும் கனமான பாத்திரமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X