கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி.... பிகினி படங்களை அனுப்பி சான்ஸ் கேட்கும் நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு தனது பிகினி போட்டோக்களை அனுப்பி சான்ஸ் கேட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சென்னை: திருமணமான நடிகை ஒருவர் தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டு வருவது தெரியவந்துள்ளது.

பஞ்சபூதங்களில் ஒன்றினை தலைப்பாக கொண்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை இவர். ஆரம்பம் முதலே கவர்ச்சி விசயத்தில் படுதாராளம் காட்டியதால், அம்மணிக்கு எக்கச்சக்கமான படங்கள் கமிட் ஆனது.

இளவட்டங்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததால், பல முன்னணி நடிகர்கள் நடிகைக்கு வலியவந்து தங்கள் படங்களில் சான்ஸ் கொடுத்தனர். இந்த நடிகையுடன் நடிக்காத நடிகர்கள் வெகு சிலரே.

டல்லடிக்க தொடங்கிய மார்க்கெட்

டல்லடிக்க தொடங்கிய மார்க்கெட்

இப்படி உச்சத்தில் இருந்த நடிகையின் மார்க்கெட் புதுவரவுகளால் டல்லடிக்க தொடங்கியது. இதையடுத்து, தெலுங்கு, கன்னடம் என வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகைக்கு தமிழில் ரீஎண்ட்ரியாகும் வாய்ப்பே இல்லாம் போனது. அங்கும் போதிய சான்ஸ் இல்லாததால், திருமணம் செய்து செட்டிலாகலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

வெளிநாட்டுக்காரருடன் திருமணம்

வெளிநாட்டுக்காரருடன் திருமணம்

தனது காதலரான வெளிநாட்டுக்காரரை கரமும் பிடித்தார். அப்போது தான் நம் சர்ச்சை நாயகனின் படத்தில் கமிட்டும் ஆனார். ஆனால் படம் படுதோல்வியானதால், மொத்தமாக குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் நடித்துள்ள மற்றொரு படம் ரிலீசாகுமா என்பதே சந்தேகம் என்கிறார்கள்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

இதனால் மனமுடைந்துபோன நடிகை தனது பழைய அஸ்த்திரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். திருமணம் ஆனாலும் பழையபடி கவர்ச்சி மழை பொழிய தயார் என இயக்குனர்களுக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறார் அவர். தனது பிகினி படங்களை இயக்குனர்களுக்கும், ஹீரோக்களுக்கும் அனுப்பி இதை வெளிப்படையாக தெரிவித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

மீண்டும் அடைமழை

மீண்டும் அடைமழை

நடிகையின் இந்த அப்ரோச்சுக்கு பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இது ஒர்கவுட் ஆனால், நடிகையின் காட்டில் மீண்டும் அடைமழை தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X