விவாகரத்து முடிவில் முன்னணி நடிகை? குடும்ப விழாக்கள் புறக்கணிப்பு..கடுப்பில் பெரிய குடும்பம்!
சென்னை: அண்மையில் பெரியக்குடும்பத்துக்கு மருமகளான பிரபல நடிகை, கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
தமிழில் அறிமுகமான அந்த நடிகை, ஒரு சில படங்களுக்குப் பிறகே ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட அவர் தமிழ் நடிகருடன் ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டார்.
இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. அதற்கேற்றார்போல் இருவரும் கோவில் கோவிலாக பரிகார பூஜை செய்தனர்.

பெரியக்குடும்பத்தின் வாரிசு
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவது உறுதி என கூறப்பட்டது. ஆனால் நடிகை தெலுங்கு சினிமாவில் கோலோச்சி வரும் முன்னணி பெரியக்குடும்பத்தின் வாரிசை காதலித்தார்.

திருமணம்
வாரிசும் தீவிர காதலில் லயிக்க, இருவீட்டார் சம்மதத்துடன் பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டார் நடிகை. திருமணத்திற்கு முன்பு நடிகைக்கு பெரிய வெற்றிப்படங்கள் என்று இல்லாத நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜாக்பாட் அடித்தது.

ரசிகர்கள் கோபம்
அம்மணி நடித்த பல படங்கள் செம ஹிட். அதற்கிடையே கணவர் குறித்த ஒரு விஷயத்தில் சர்ச்சைக்கு ஆளாகி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் அம்மணி.

புறக்கணிக்கும் நடிகை
இந்நிலையில் மாமனார் வீட்டில் நடக்கும் விசேஷங்களை புறக்கணித்து வருகிறார் நடிகை. அண்மையில் நடைபெற்ற மாமனாரின் விருது விழாவை புறக்கணித்தார்.

மருமகள் மிஸ் - அப்செட்
திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற நிகழ்ச்சியில் மருமகள் மட்டும் மிஸ்ஸானது பெரியக் குடும்பத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியதாம். ஆனால் அப்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாக சொல்லி சமாளித்துவிட்டார்களாம்.

மீண்டும் புறக்கணிப்பு
தற்போது குடும்பத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவிலும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டாராம் நடிகை. இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிஸ்அன்டர்ஸ்டான்டிங்
கணவர் மட்டும் பங்கேற்கும்போது மனைவி ஏன் புறக்கணிக்கிறார். திரைத்துறையில் மிகப்பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு நடிகை ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? ஏதாவது மிஸ்அன்டர்ஸ்டான்டிங்கா என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

விவாகரத்து முடிவு?
இதனிடையே நடிகைக்கும் நடிகரான கணவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகை தன்னுடைய கணவரை பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் டோலிவுட் பத்திரிகைகளில் தகவல்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











