கைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு
சம்பளப் பாக்கியால் உச்ச நடிகர் பட ஷூட்டிங்கிற்கே வராமல் பரபரப்பை ஏற்படுத்தி விட்டாராம் சூப்பர் நடிகை.
சென்னை: உச்சநடிகரின் படத்தில் சம்பள பாக்கி காரணமாக கடைசி நாள் படப்பிடிப்பு வராமல், படக்குழுவை டென்சன் ஆக்கி விட்டாராம் தென்னிந்தியாவிலேயே சூப்பர் என்ற பட்டத்தை பெற்ற நடிகை.
சமீபகாலமாக இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் போதிலும், நடிகையின் மவுசு மட்டும் இன்னமும் குறையவில்லை. அதிலும் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்ததில் நடிகைக்கு ரொம்பவே சந்தோசம். நடிப்பைப் போலவே சம்பள விவகாரத்திலும் அம்மணி ரொம்பவே கெட்டியாம்.
கையில் காசு வைத்தால் தான், நடிக்கத் தொடங்குவேன் என்பதை கறாராகச் சொல்லி விடுவாராம். அதோடு பட விழாக்களிலும் பங்கேற்பதில்லை என்பதால், தயாரிப்பு தரப்பினர் தனது சம்பளத்திலும் கை வைத்து விடக் கூடாது எனக் கவனமாக இருப்பாராம். சம்பள விவகாரத்தில் யாராக இருந்தாலும் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லையாம்.

உச்ச நடிகர் படம்
உச்ச நடிகரின் படத்தில் ஒரு ஓரத்திலாவது நிற்பது போன்ற காட்சி கிடைத்து விடாதா என பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். நடிகைக்கோ எவ்வளவு கேட்டாலும் சம்பளமாகத் தரத்தயார் எனக் கூறி இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். வாங்கிய சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் நடிகையும் தனது பகுதியை நடித்துக் கொடுத்து விட்டார்.

சம்பளப் பிரச்சினை
ஆனால் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தராமல் தயாரிப்பு தரப்பு பிடித்து வைத்திருந்ததாம். அதைக் காட்டி புரொமோசனுக்கு நடிகையை வர வைத்து விடலாம் என அவர்கள் ஐடியா செய்திருப்பார்கள் போல. ஆனால் நடிகை என்ன லேசுபட்ட ஆளா. கடைசி நாளில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான காட்சிக்கு நடிகை மட்டும் ஆப்செண்ட்.

பதறிய இயக்குநர்
இதனால் இயக்குநர் பதறிப் போய் விட்டாராம். உச்சநடிகர் உட்பட படக்குழுவே காத்துக் கொண்டிருக்க, நடிகையோ மீதி சம்பளத்தைக் கொடுத்தால் தான் ஹோட்டலில் இருந்தே கிளம்பி வருவேன் என கறாராகச் சொல்லி விட்டாராம். பிறகு வேறு வழியில்லாமல் இயக்குநர் சமாதானப்படுத்தி, ‘உங்க சம்பளத்திற்கு நான் கேரண்டி' எனக் கூறி நடிகையை வர வைத்திருக்கிறார்.

கோபத்தில் உச்ச நடிகர்
இந்த விவகாரத்தில் உச்ச நடிகருக்கும் கோபம் தானாம். இரண்டெழுத்து தயாரிப்பு நிறுவனமும், இவ்வளவு கறார் காட்டும் நடிகையை இனி தங்களது தயாரிப்பில் நடிக்க வைப்பதில்லை என கறாராக முடிவெடுத்து விட்டார்களாம். கொஞ்சமும் பயமில்லாமல் துணிச்சலாக உச்சநடிகர் படத்திற்கே இப்படி செய்து விட்டாரே என நடிகையைப் பற்றி பேச்சுதான் இப்போது டாக் ஆப்தி டவுன்.


Click it and Unblock the Notifications











