நடிகைக்கு பளார் விட்ட தாயார்.. சொல்லிக் கேட்காத மகளை என்ன செய்வதுனு புலம்பல்.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: சென்னை: திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தற்போது சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிகம் பேசப்பட்டு வருகிறாராம். குறிப்பாக அவரது சமீபத்திய நடவடிக்கைகள் குடும்பத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சினிமாவில் அறிமுகமான காலத்தில் மிகவும் அடக்கமாக இருந்த அந்த நடிகை, தற்போது தனது விருப்பப்படி முடிவுகளை எடுக்கும் அளவுக்கு மாறி விட்டாராம். அதிலும், வீட்டில் யார் என்ன சொன்னாலும் கேட்காமல் தனது மனதில் பட்டதை மட்டுமே செய்து வருகிறாராம்.
இப்படி இருக்கையில், சமீபத்தில் நடிகையின் ஒரு முடிவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாம். குறிப்பாக நடிகையின் தாயார் பலமுறை எச்சரித்தும், ஆலோசனை கூறியும் வந்த நிலையில், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகை தனது முடிவில் உறுதியாக இருந்தாராம்.

பளார்: ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த தாயார், "நான் சொல்றதை கொஞ்சமாவது கேளு" என்று கடுமையாக சண்டை போட்டதுடன், கோபத்தில் பளார் என்று அறைந்துவிட்டாராம். இந்த சம்பவம் வீட்டிற்குள் நடந்ததால் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது அது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.
இதற்குப் பிறகும் நடிகை தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், "சொல்லிச் சொல்லி பார்த்தாச்சு.. இனிமேல் இந்தப் பொண்ணை என்ன செய்வதுனே தெரியல" என்று தாயார் நெருங்கியவர்களிடம் புலம்பியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
காரணம் இதுவா?: இதற்கிடையே, நடிகையின் இந்த பிடிவாதத்திற்கு பின்னால் காதல் விவகாரமா? அல்லது புதிய நட்பு வட்டாரமா? என்ற கேள்விகளும் திரையுலகில் கிளம்பியுள்ளன. சிலர் திருமணம் தொடர்பான பிரச்சினை என்கிறார்கள். இன்னும் சிலர் நடிகையின் புதிய வாழ்க்கை முடிவுதான் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர்.
எது எப்படியோ, தாயாருக்கும் நடிகைக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதல் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளதுடன், அந்த நடிகை அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதையும் பலர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications