»   »  கவர்ச்சி நடிகையிடம் அடி வாங்கிய இயக்குநர்!

கவர்ச்சி நடிகையிடம் அடி வாங்கிய இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்படத் துறை என்றால் மது, மாது கேளிக்கை கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாதது என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் ஆழப் பதிந்து விட்டது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் இவர்களின் ஆசைக்கு அடிபணிய வேண்டும். மறுத்தால் திரையில் தேவதையாக ஜொலித்து, பொருளும், புகழும் அடைய முடியாது என்பது நடிக்க வரும் அறிமுக நடிகைகளுக்கு கோடம்பாக்கத்தில் எடுக்கப்படும் அடிப்படை வகுப்பு என்கிறார் துணை நடிகைகள் ஏஜண்ட் ஒருவர்.

இந்திய சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்களால் தங்கள் விருப்பத்திற்கு மாறாக கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை, கொடூரங்களை நடிகைகள் கெளரவம் கருதி, கிடைத்த வாய்ப்பு பறி போய்விடுமோ என்ற பயம் காரணமாக பகிரங்கப்படுத்துவது கிடையாது. இதையும் மீறி வெளிவரும் பிரச்சினைகளை சினிமா சங்கங்களில் பேசி முடித்துக் கொள்வது காலங்காலமாக நடந்து வருகிறது.

Actress slapped director

சர்வதேச ரீதியில் பொருளாதாரம், காலாசார மாற்றங்கள் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் இந்திய சினிமாவிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சி இந்திய சினிமாவை அடுத்த கட்ட நவீன மயமாக்கலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. கடந்த காலங்களை போல கதாநாயகிகளை கேரளா, ஆந்திரா என இயக்குநர்கள் தேடிச் செல்வது இல்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வாய்ப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேலையை எளிதாக்கியுள்ளது. முன்பு போல் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து நடிக்க வாய்ப்பு தேடி வருவது குறைந்துவிட்டது. வருகிற பெண்கள் படித்தவர்களாக, இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தும் பன்முக ஆளுமை உடையவர்களாக வருகின்றனர். இவர்கள் விருப்பத்திற்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் கொடுக்கும் போக்கு குறைந்து வருகிறது. அதையும் மீறி சிலர் செய்யும் அத்துமீறல்களை நடிகைகள் பொது வெளியில் பகிரங்க படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

மலையாள நடிகை பாவனாவை தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்க திட்டமிட்டு நடத்தப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் பரபரப்பான சூழலில், தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் அத்து மீறியதால் அடி வாங்கியுள்ளார் நடிகையிடம்.

குற்றாலத்தில் நடந்தது அந்தப் படப்பிடிப்பு. பக்காவாக வர வேண்டும் என்ற நினைப்பில் அப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் நடிக்க தன் கணவருடன் வந்த நடிகையை அவரது மகன் வயதுடைய அறிமுக இயக்குநர் தொடர்ச்சியாக சீண்டி வந்துள்ளார் (நாட்டாமையில் காமரசம் சொட்ட நடித்த கவர்ச்சி நடிகை இவர்). இதை அறிந்த அவரது கணவருக்கும் நடிகைக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இயக்குநருக்கு கிளிப்பிள்ளைக்கு கூறுவது போல், தன் வயது, அனுபவம் பற்றி கூறி தப்பு பண்ணாதே தம்பி என்று கூறியுள்ளார் நல்லவிதமாக நடிகை. அப்படியும் அடங்காத இயக்குநர் தொடர் தொந்தரவு கொடுக்கவே, ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார் நடிகை.

ஹீரோ, ஹீரோயின் மற்றும் 300க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் கலந்து கொண்ட படப்பிடிப்பு தளத்தில், 'தம்பி இங்கே வா' என இயக்குநரை அழைத்து அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் அரை விட்டு தன் ஆத்திரத்தை தணித்து கொண்டுள்ளார். மொத்த யூனிட்டும் என்ன செய்வது என்று அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது.

இலங்கை தமிழர் தயாரிக்கும் இந்தப் படம், இயக்குநருக்கு முதல் படம். தினந்தோறும் 500 துணை நடிகர்களுடன் பிரம்மாண்டமாய் படப்பிடிப்பு நடந்து வந்தது. அறிமுக இயக்குநர் என்றெல்லாம் பாராமல் கேட்ட அனைத்து வசதிகளையும் தயாரிப்பாளர் செய்து கொடுத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து தலைகால் தெரியாமல் ஆட்டம் போட்டாராம் இயக்குநர். . தன் தாய் தந்தை கூட சார் என்று தான் அழைக்க வேண்டும் என கட்டளை போடும் அளவுக்குப் போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்பட்ட இவரது நட்பு வட்டமே விலகிப் போய்விட்டதாம்.

விளைவு, நடிகையை படத்திலிருந்தே தூக்கிவிட்டதாம் தயாரிப்பு தரப்பு. அத்துடன் இயக்குநரிடமும் இன்னொரு முறை இப்படி நடந்தால் உன்னையும் தூக்கிவிடுவோம் என எச்சரித்துள்ளார்களாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
A senior actress has slapped debutant director on the sets for his sexual torture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil