நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே விரிசல்.. ஒரு பாட்டுக்கு வந்துட்டு வேலையை காட்டிய நடிகை
சென்னை: தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் ஈகோ சண்டைகளும், நடிகர்-இயக்குநர் மோதல்களும் ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட வந்த ஒரு முன்னணி நடிகை, ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளார் என்ற தகவல் தான் இப்போது கோலிவுட்டின் டாப் கிசுகிசுவாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தில் ஒரு முக்கிய துள்ளலிசை பாடலுக்கு நடனமாட, கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் டாப் கியரில் இருக்கும் ஒரு பிரபல நடிகையை படக்குழு ஒப்பந்தம் செய்தது. 'ஒரே ஒரு பாட்டு தானே' என்று நினைத்த இயக்குநருக்கு, அந்த நடிகை படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததில் இருந்தே சோதனைகள் ஆரம்பமாகியுள்ளன.
வழக்கமாகவே, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் இயக்குநரின் முடிவே இறுதியானது. ஆனால், இந்த பாடலின் படப்பிடிப்பின் போது, அந்த நடிகை தனது ஆடைகள் மற்றும் நடன அசைவுகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று இயக்குநரிடம் பிடிவாதம் பிடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் கேமரா ஆங்கிளை மாற்ற வேண்டும் என்று எல்லாம் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநரோ, "பாடலின் மூட் மாறிவிடும், நான் சொல்வது படி தான் பாடல் இருக்க வேண்டும்" என்று கறாராகக் கூறிவிட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாகக் கூறப்படுகிறது.

நடிகைக்கு நடிகர் சப்போர்ட்: படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன?: இந்த மோதலில் அந்த நடிகைக்கு ஆதரவாக படத்தின் ஹீரோ தலையிட்டது தான் ட்விஸ்ட்டே, நடிகையின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகக் கூறி, ஹீரோ இயக்குநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். "ஒரே ஒரு பாட்டுக்கு வந்துட்டு இப்படி வேலையை காட்டுறாங்களே" என்று இயக்குநர் புலம்ப, ஹீரோவோ நடிகையின் பக்கமே சாய்ந்துள்ளார். இதனால் நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே ஸ்பாட்டிலேயே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
நடிகை சொன்னபடி: ஹீரோவின் இந்த திடீர் மாற்றமும், நடிகைக்கு அவர் கொடுத்த அதீத ஆதரவும் ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரின் பேச்சை மீறி, நடிகை கேட்ட மாற்றங்களுடன் தான் அந்தப் பாடல் இறுதியாகப் படமாக்கப்பட்டதாம்.
மனமுடைந்த இயக்குநர்: இதனால் மனமுடைந்த இயக்குநர், படத்தின் அடுத்தகட்ட வேலைகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு பாட்டுக்கு வந்து ஒட்டுமொத்த படக்குழுவிலும், இயக்குநர்-நடிகர் உறவிலும் விரிசலை ஏற்படுத்திய அந்த நடிகையைப் பற்றித்தான் இப்போது கோலிவுட் முழுக்க ஒரே பேச்சாகக் கிடக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications