»   »  'அடப்பாவமே, ஒரு படம் வர்றதுதுக்குள்ள ராசியில்லாத நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே!'

'அடப்பாவமே, ஒரு படம் வர்றதுதுக்குள்ள ராசியில்லாத நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்களே!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் அறிமுகமான சென்னை பெண் அவர். தமிழில் இரண்டாவது படமாக என்னாச்சு டயலாக்கால் பிரபலமான படத்தின் இயக்கத்தில் வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

அந்த படத்தில் நடிக்கும்போதே ஒல்லி நடிகருக்கு ஜோடியாக ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் பெரிய வாய்ப்பு வந்தது. அதிலும் நடித்து முடித்து விட்டார். ஆனால் இந்த படமும் வெயிட்டிங் லிஸ்டில் சேர்ந்துவிட்டது.

பெரிய படம் கிடைத்ததும் தேடி வந்த வாய்ப்புகளை 'இந்த படம் ரிலீஸ் ஆகட்டும்' என்று வெயிட்டிங் லிஸ்டில் போட்டவர் இப்போது, தான் நடித்த படங்களே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் பெரும் கவலையில் இருக்கிறாராம்.

நடிகையிடம் தேதி கேட்டு மொக்கை வாங்கியவர்கள் நடிகையை ராசியில்லாதவர் என்று கிளப்பி விட்டு வருகிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That stylish and lean actor combo film heroine worried about her films postponed continuously.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil