பேமெண்டை ஏத்த முடியலையே... - தவிக்கும் நடிகை!
அந்த ஆங்கிலோ இந்தியன் நடிகைக்கு சமீப படங்களில் இருந்து பேர்தான் கிடைக்கிறதாம். ஆனால் அதை வைத்து பேமெண்டை உயர்த்த முடியாமல் அவதிப்படுகிறாராம்.
குறைவான படங்களில் நடித்தாலும் நன்றாக நடிக்க தெரிந்த நடிகையாக பெயர் எடுத்தவர் அந்த ஆங்கிலோ இந்தியன் நடிகை. சமீபத்தில் வெளியான பெண்ணியம் பேசும் படத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளைக் குவித்தார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான திகில் படத்தில் கிளுகிளுவாக நடித்து தன்னால் எதிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை காட்டினார். ஆனால் இன்னும் சம்பளத்தை ஏற்ற முடியாமல் தவிக்கிறாராம்.
பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தால்தான் பேமெண்ட் ஏறும். இந்த கோடம்பாக்க ஃபார்முலா எப்போது நடிகைக்கு புரியப்போகிறதோ?
Comments


Click it and Unblock the Notifications