நானும் எத்தனை நாள் தான் நல்லவளாவே இருப்பது: இயக்குநரை அதிர வைத்த நடிகை

By Siva

சென்னை: அழகும், திறமையும் வாய்ந்த பிரபல நடிகை இயக்குநர் ஒருவரை தெறித்து ஓடச் செய்துள்ளார்.

அழகும், திறமையும் வாய்ந்த நடிகை அவர். நடிக்க வந்த போது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே போன்று தான் உள்ளார். அவர் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக உள்ளனர்.

ஹீரோக்களுக்கு மிகவும் பிடித்த நடிகை என்று பெயர் எடுத்துள்ளவர் அந்த அழகி.

ஹீரோயின்

ஹீரோயின்

அந்த நடிகை தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை ஒருவரை வைத்து படம் ஒன்றை இயக்கத் துவங்கினார் அந்த அக்கட தேசத்து இயக்குநர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஹீரோயின் ஒரு நாள் என்னால் முடியாது என்று கூறிவிட்டு நடையை கட்டிவிட்டார். இதையடுத்து இயக்குநருக்கு நம்ம சமத்து அழகி நடிகையின் நினைவு வந்து அவரை அணுகியுள்ளார்.

இயக்குநர்

இயக்குநர்

இயக்குநர் நடிகையை சந்தித்து கதை சொல்லியுள்ளார். நடிகையும் பொறுமையாக கதையை கேட்டுவிட்டு ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அவர் சொன்ன தொகையை கேட்டு இயக்குநருக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சாம். இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க என்னால் முடியாது என்று கூறிவிட்டு இயக்குநர் கிளம்பிச் சென்றாராம்.

மார்க்கெட்

மார்க்கெட்

அந்த நடிகை ஹிட் படம் கொடுத்தே இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மார்க்கெட் நிலவரமும் அப்படி ஒன்றும் சரியாக இல்லை. இதில் அவருக்கு இம்புட்டு பெரிய தொகை கேட்குதா என்று இயக்குநர் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி புலம்புகிறாராம். சமத்துப் பொண்ணு என்று நினைத்தால் இப்படி அதிர வைக்கிறாரே என்கிறாராம் இயக்குநர். நடிகை அதிர்ச்சி கொடுத்ததை அடுத்து புது ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.

பொறுமை

பொறுமை

ஹீரோக்கள் படப்பிடிப்பு எவ்வளவு லேட்டாக வந்தாலும் கோபப்படாமல் பொறுமையாக நடித்துக் கொடுத்து தான் சமத்து நடிகை என்று பெயர் எடுத்தார். மேலும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பெரிதாக கன்டிஷன் போடாமல் இருந்து வந்தவர் திடீர் என்று பெரிய தொகையே கேட்டது அக்கட தேசத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X