8 விரலை காட்டிய நடிகை: தெறித்து ஓடிய தரகர்
Recommended Video

சென்னை: நடிகை ஒருவர் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்ட பணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
திறமையான நடிகை அவர். நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் தான் உள்ளார். பெரிய இடத்து ஆதரவு கிடைத்தும் அவரால் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற முடியவில்லை.
மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசுவதற்கு பெயர் போனவர்.

சம்பளம்
நடிகையை விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறி தரகர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். நடிகையோ ரூ. 8 லட்சம் கொடுத்தால் வருகிறேன் என்றாராம். முன்னணி நடிகைகளே இவ்வளவு பெரிய தொகையை கேட்பது இல்லை. இந்தம்மா இப்படி கேட்குதே என்று தரகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம்.

திமிர்
ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார் நடிகை. நடிப்பில் எல்லாம் அவரை குறை சொல்ல முடியாது. ஆனால் அவர் சில விஷயங்களில் பேசும் விதம் சினிமாக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரை திமிர் பிடித்த நடிகைகள் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.

ரிஸ்க்
கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுக்கவே தயங்க மாட்டார் அந்த நடிகை. அதற்காக அவர் ஒரு படத்தில் காட்டிய கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டனர். அழகும், திறமையும் இருந்தாலும் கூடவே கெட்ட பெயர் இருப்பதால் பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வருவது இல்லை. அவர் கையில் தற்போது ஒரு படம் மட்டுமே உள்ளது.

கருத்து
ஏற்கனவே அவர் வாயை திறந்தால் பல பிரபலங்கள் கடுப்பாகிறார்கள். இந்நிலையில் அவர் மீ டூ குறித்து துணிச்சலாக கருத்து தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. உண்மையை சொன்னதால் அவருக்கு மேலும் கெட்டப்பெயர் ஏற்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications











