கதை சொல்ல வரும் இயக்குநர்களை முகம் சுளிக்க வைக்கும் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவரை பார்த்து இயக்குநர்கள் முகம் சுளிக்கிறார்கள்.
இளம் நடிகை ஒருவர் தனது பெயரை கெடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் அதை ஏற்பது இல்லை. அதற்கு தனி விளக்கம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறார் அம்மணி. கவர்ச்சி தூக்கலான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் உங்கள் படத்தில் இருக்குமா என்று எடுத்த எடுப்பில் கேட்கிறாராம் நடிகை.
அது போன்ற காட்சிகள் இல்லை என்று எந்த இயக்குநராவது கூறினால் அப்படி என்றால் நான் சொல்லும் கவர்ச்சி காட்சிகளை சேருங்க, இல்லை என்றால் நடையை கட்டுங்க என்கிறாராம்.
கவர்ச்சி, இரட்டை அர்த்த வசன காட்சிகளில் நடிக்க நடிகைகள் யோசிக்க இவரோ அதையே கேட்டு அடம்பிடிக்கிறாராம். இந்த பொண்ணு என்ன ஒரு மாதிரி இருக்கு என்று இயக்குநர்கள் நொந்து கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











