அவரை பகைச்சிக்காதே.. அப்பா சொன்ன அட்வைஸ்.. அப்படி அந்த நடிகை பல்டி அடிக்க அதுதான் காரணமா?

By Staff

மும்பை: பிரம்மாண்ட படத்தில் நடித்த அந்த நடிகை இயக்குநர் மீது ரொம்பவே கோபப்பட்டு பண்ண காரியம் பெரியளவில் பிரச்சனையை கிளப்ப திடீரென அப்படியே பல்டி அடித்தது சினிமா உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த இயக்குநர் படத்தில் நடிக்க சின்ன சான்ஸ் கிடைக்காதா? என பல பிரபல நடிகைகள் ஏங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வாய்ப்பு கிடைத்தும் தன்னை சரியாக அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லையே, தனக்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லையே என புலம்ப ஆரம்பித்தது தான் பிரச்சனைக்கே காரணம்.

அட்மாஸ்பியர் போல

அட்மாஸ்பியர் போல

அத்தனை பெரிய பிரம்மாண்ட படத்தில் நீங்க தான் முக்கியமான ஹீரோயின், உங்களுக்கு செம ஸ்பெஷல் காட்சிகள் படத்தில் இருக்கு என ஆசை வார்த்தைகளை இயக்குநர் அள்ளி வீச அந்த நடிகையும் உடனடியாக ஓகே சொல்லி ஏகப்பட்ட நாட்கள் கால்ஷீட்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

எல்லாமே கட்

எல்லாமே கட்

ஆனால், கடைசியாக படத்தை பார்க்கும் போது, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் போல தனக்கு குறைவான ஸ்பேஸ் மட்டும் தான் படத்தில் கிடைத்திருப்பதை நினைத்து கடுப்பாகி உள்ளார் அந்த நடிகை. இயக்குநர் புரமோஷன்களுக்கு அழைத்துப் பார்த்தும் அடுத்த படத்தில் பிசியாக இருக்கிறேன் என அவாய்டு பண்ணி விட்டாராம்.

உச்சகட்ட கோபத்தில்

உச்சகட்ட கோபத்தில்

படம் வெளியானதும் அந்த நடிகையின் வட்டத்தில் இருப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு உங்களை அந்த இயக்குநர் ரொம்பவே ஏமாற்றி விட்டார் என கொம்பு சீவிவிட உச்சகட்ட கோபத்திற்கு சென்ற அந்த நடிகை திடீரென சமூக வலைதளத்தில் அப்படியொரு காரியத்தை செய்து தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டார்.

அப்பா அட்வைஸ்

அப்பா அட்வைஸ்

அந்த இயக்குநர் லேசு பட்டவர் கிடையாது. நீ இப்போதான் வளர்ந்து வருகிறாய். பெரியவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நடிகையின் அப்பா அட்வைஸ் கொடுத்த நிலையில் தான் தற்போது, அந்த பிரச்சனையே நடக்காத மாதிரி பல்டி அடித்து இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறந்திருக்கிறாராம் அந்த நடிகை.

சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்

சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்

அரசியலில் பல விஷயங்கள் சாதாரணம் என கடந்து போவதை போல சினிமாவில் இதுபோன்ற சில விஷயங்கள் சர்வ சாதாரணம் என்கின்றனர். பெரிய இயக்குநர்கள் இரு படங்களை எடுப்பது போல எடுத்து ஒரு படத்தையே வெட்டி ஒட்டுவார்கள் பல நடிகர்கள் நடித்தும் அவர்களின் ஒரு சீன் கூட வராமல் எத்தனையோ படங்களின் ஃபைனல் அவுட் புட் வந்திருக்கிறது என நடிகைக்கு அவரது காதலரும் ஆறுதல் கூறி உள்ளாராம்.

இயக்குநர் அப்செட்

இயக்குநர் அப்செட்

ஆனால், இந்த விஷயத்தில் நடிகையின் செயலால் இயக்குநர் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். இதற்கு மேல் அந்த நடிகையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என்கிற அளவுக்கு முடிவு எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த இயக்குநரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த நடிகையின் பெயர் இல்லை என்றாலே அந்த பிரச்சனை தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X