ஊரே காரித் துப்பும் இயக்குநருக்கு வக்காலத்து வாங்கும் நடிகை

By Siva

சென்னை: இளம் நடிகை ஒருவர் பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

வாய்ப்பு தேடி வந்த நடிகைகளிடம் அசிங்கமாக நடந்து கொண்டதுடன், அவர்களை ஆடையை அவிழ்க்குமாறு கூறிய பிரபல இந்தி இயக்குநரின் குட்டு அண்மையில் உடைந்தது.

அந்த இயக்குநரின் படங்களில் நடித்த ஒரு நடிகை அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் இப்படி பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்

கோலிவுட்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அந்த நடிகை அவ்வப்போது பாலிவுட் பக்கமும் செல்வார். அப்படி சென்றபோது தான் பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநரின் படங்களில் நடித்தார். அவரிடம் இயக்குநர் பற்றி கேட்டால் அவர் என்னிடம் நன்றாக தானே நடந்தார் என்கிறார்.

இயக்குநர்

இயக்குநர்

எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம். நான் அந்த இயக்குநரின் படங்களில் நடித்தபோது அசவுகரியமாக உணரவே இல்லை. அவர் என்னிடம் நன்றாக நடந்து கொண்டார். அவருடன் சேர்ந்து வேலை செய்தது சவுகரியமாக இருந்தது என்கிறார் அந்த நடிகை.

புகார்கள்

புகார்கள்

அந்த இயக்குநரின் படங்களில் நடித்த நடிகைகள் பலர், ஏன் பேட்டி எடுக்க சென்ற பெண் பத்திரிகையாளர்கள் கூட பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை அந்த இயக்குநருக்கு ஆதரவாக பேசியது பாதிக்கப்பட்டவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் நடிகையின் பேச்சை நம்பத் தயாராக இல்லை.

படம்

படம்

பாலியல் புகாரில் சிக்கிய இயக்குநரின் படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த இளம் நடிகையிடம் கேட்டதற்கு, அது அவர் கருத்து. அவருக்கு மோசமான அனுபவம் இருந்ததால் அவர் அப்படி சொல்வதில் நியாயம் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X