ஸ்ரீ ரெட்டியிடம் சொல்லட்டா?: படுக்கைக்கு அழைத்த இயக்குனரை மிரட்டிய நடிகை
சென்னை: நடிகை ஒருவர் ஸ்ரீ ரெட்டி பெயரை வைத்து இயக்குனரை மிரட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பிய ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள அவர் கோலிவுட்டிலேயே செட்டில் ஆக விரும்புகிறார்.
மேலும் ஸ்ரீ லீக்ஸ் தொடரும் என்று எச்சரித்துள்ளார் அவர்.

ஆசை
இரண்டெழுத்து கவர்ச்சி நடன நடிகைக்கு ஹீரோயின் ஆகும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து தனக்கு ஏற்பட்டுள்ள ஆசை குறித்து சில இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார். நடிகையின் ஹீரோயின் ஆசை பற்றி கேட்ட இயக்குனர்கள் சரி சரி என்று போக ஒருவர் மட்டும் ஆர்வக்கோளாறில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டாராம்.

படுக்கை
உங்களை ஹீரோயினாக்கினால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று இயக்குனர் ஒருவர் கவர்ச்சி நடிகையிடம் கேட்டுவிட்டு சிரித்தாராம். அவர் படுக்கைக்கு அடிபோடுகிறார் என்பதை புரிந்து கொண்ட நடிகையோ ஸ்ரீ ரெட்டியிடம் சொன்னால் உடனே பலன் கிடைக்கும், சொல்லிப் பார்க்கட்டுமா என்று கேட்க இயக்குனர் ஆடிப் போய்விட்டாராம்.

வேண்டாம்
எங்கே அந்த நடிகை ஸ்ரீ ரெட்டியிடம் புகார் தெரிவித்து தனது இமேஜை டேமேஜ் செய்துவிடுவாரோ என்று பயந்த இயக்குனர் நான் சும்மா விளையாட்டுக்கு பேசியதை போய் சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா என்று கூறிவிட்டு இனிமேல் இந்த நடிகை இருக்கும் பக்கமே வரக் கூடாதுடா சாமி என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தாராம்.

இப்படியுமா?
யாராவது சினிமா வாய்ப்பு தருகிறேன் படுக்கைக்கு வா என்று அழைத்தால் ஸ்ரீ ரெட்டியிடம் தெரிவித்துடுவேன் என்று கூறி கூட மிரட்ட முடியும் என்பது பிற நடிகைகளுக்கும் தற்போது புரிந்துள்ளது. அடடே, ஸ்ரீ லீக்ஸ் மீது பிரபலங்களுக்கு இவ்வளவு பயமா?. ஸ்ரீ லீக்ஸ் பட்டியலை தொடர்ந்து வெளியிடுவேன் என்று வேறு அந்த அம்மணி தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











