நடிப்புக்கு முழுக்கு போடும் பார்ட்டி நடிகை?
சென்னை: நடிகை ஒருவர் சினிமாவில் இருந்து விலகும் ஐடியாவில் உள்ளார்.
பார்ட்டிகள் என்றால் அந்த நடிகை நிச்சயம் அங்கு இருப்பார். படங்களில் நடிப்பதை விட பார்ட்டிகளுக்கு செல்ல முக்கியத்துவம் அளிக்கிறார் அவர். தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளையும் ஏற்பது இல்லை.
நடிகையின் செயலால் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கடுப்பாகியுள்ளனர். ஏதோ முன்னணி நடிகை போன்று சீன் போடுகிறாரே என்று நொந்து கொள்கிறார்கள்.

யோகி
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அந்த நடிகை அடம் பிடிக்க மாட்டார். இப்படி கவர்ச்சி, பார்ட்டி, கூத்து, கும்மாளம் என்று இருக்கும் அம்மணி அண்மை காலமாக பெரிய யோகி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். அவர் செய்யும் செயல்களுக்கும், பேசும் பேச்சுக்கும் தொடர்பே இல்லையே என்று கோலிவுட்டில் சிரிக்கிறார்கள்.

விடை
நடிகை அடிக்கடி பயணம் செய்கிறார். கேட்டால் என் மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலை தேடி பயணம் மேற்கொள்கிறேன் என்கிறார். இப்படி ஊர், ஊராக சுற்றுவதற்கு பதில் நாலு படத்தில் நடித்தால் காசு கிடைக்கும் அல்லவா என்று கேட்டால் இருப்பதை வைத்து திருப்தி அடையும் பக்குவம் வந்துவிட்டது என்று கூறுகிறார் நடிகை.

சினிமா
நடிகையின் கெரியர் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் அவர் தன்னை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். அதில் ஏதாவது சுவாரஸ்யமாக நடந்தால் சினிமாவுக்கு முழுக்கு போடும் முடிவில் உள்ளார் நடிகை. மேலும் ஜாகையை மாற்றவும் முடிவு செய்திருக்கிறார் அம்மணி. நிம்மதி, அமைதியை தேடி இடத்தை மாற்றப் போகிறாராம்.

காதலர்
நடிகை ஏன் திடீர் என்று இப்படி நடந்து கொள்கிறார் என பலருக்கும் புரியவில்லை. அவர் நடிகர் ஒருவரை காதலித்ததாக கூறப்பட்டது. ஒரு வேளை அந்த காதலுக்கு பிறகு தான் இந்த ஞானோதயமா என்றும் பேசப்படுகிறது. ஆனால் தற்போதைய காதலர் அப்படி எல்லாம் இல்லையே. அப்படி இருக்கும்போது நடிகை மற்றும் ஏன் இப்படி நடக்கிறார் என்று அவரை பற்றி தெரிந்தவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











