திமிர்.. திமிரோ திமிர்.. சர்ச்சை நாயகிக்கு ஆனாலும் இவ்வளவு தலைக்கனம் ஆகாது.. டென்சனில் படக்குழு!

சர்ச்சை நாயகியின் அலட்சியமான நடவடிக்கைகளால் படக்குழுவினர் அவர் மீது செம காண்டில் இருக்கிறார்களாம்.

சென்னை : பலத்த எதிர்ப்புக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே ரிலீசாக இருக்கிறது சர்ச்சை நாயகியின் கட்டிங் படம்.

பெரிய வீட்டிற்கு போனதன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் இந்த நடிகை. நிகழ்ச்சியில் அவர் நடந்துகொண்ட விதத்தை பார்த்து, அவர் மீது மக்களுக்கு அதீத அன்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

திரைப்படங்களில் நடித்ததைவிட இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த பேரும் புகழும் காரணமாக நடிகைக்கு கர்வம் ஏற்பட்டுவிட்டது. தன்னையும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக அவர் கருதி வருகிறார்.

மாறாத நடிகை:

மாறாத நடிகை:

பெரிய வீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படம் அவருக்கு வேறு மாதிரியான அடையாளத்தையே பெற்று தந்தது. அதற்கு பிறகாவது நடிகை மாறுவார் என திரையுலகினர் எதிர்பார்த்தனர். ஆனால் நடிகை இன்னும் மாறவில்லை.

சர்ச்சை சர்ச்சையோ சர்ச்சை:

சர்ச்சை சர்ச்சையோ சர்ச்சை:

இந்த சூழ்நிலையில் தான் பெண் இயக்குனரின் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நடிகை. அப்படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயமும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. நடிகையும் தமது பேட்டிகளில் தொடர்ந்து விவகாரமான விஷயங்களையே பேசி வருகிறார். இதனால் படத்திற்கு மேலும் பின்னடைவு ஏற்படுமோ என படக்குழுவினர் அஞ்சுகின்றனர்.

ஓவர் தலைகனம்:

ஓவர் தலைகனம்:

அதோடு நம்பர் நடிகைக்கு இணையாக தன்னையும் நம்பர் ஒன் நடிகையாக இணைக்கும் இவர், பட விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஊடகங்களையும் மதிக்காமல் நடந்துகொள்கிறார். குறிப்பிட்ட செய்தி நிறுவனங்களிடம் மட்டும் தான் பேசுவேன் என்கிறார். தன்னம்பிக்கைக்கும், தலைகனத்திற்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் நடந்து கொள்கிறார் நடிகை.

படக்குழு அதிருப்தி:

படக்குழு அதிருப்தி:

குறிப்பாக தனக்கு பெயரும் புகழும் வாங்கி கொடுத்த தொலைக்காட்சியையே தற்போது அவர் மதிப்பதில்லை. அந்த தொலைக்காட்சியில் இந்த படத்துக்காக நடத்தப்பட்ட விளம்பர நிகழ்ச்சிக்கு கூட அவர் செல்லவில்லை. இதனால் தயாரிப்பாளர் தரப்பு அதிருப்தியில் உள்ளது.

புலம்பும் தயாரிப்பாளர்:

புலம்பும் தயாரிப்பாளர்:

அவனவன் நூறு படங்கள் எடுத்துவிட்டு அசால்டாக போகும் போது, இந்த நடிகையை வைத்து ஒரேயொரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும், போதும் என ஆகிவிட்டது என புலம்புகின்றனர் படக்குழுவினர். இதனால் நடிகையின் பக்கமே இனி தலைவைத்து படுக்கக் கூடாது என முடிவு செய்திருக்கிறார்கள் அவர்கள்.

புதிய இயக்குநர்கள் பயம்:

புதிய இயக்குநர்கள் பயம்:

மற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடமும் நடிகையை பற்றிய இதே பீதி தான் நிலவுகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். இதனால் புதிய படங்களுக்காக நடிகையை அணுகவே அஞ்சுகிறார்களாம் இயக்குநர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X