குறுக்கு வழியில் பெரிய முதலாளி வாய்ப்பை பெற்ற நடிகை: பகீர் தகவல்

By Siva

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த வட மாநில நடிகை குறுக்கு வழியை கையாண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கேரளத்து சேச்சி கலந்து கொண்டு ஏகத்திற்கும் பிரபலமானார். இதை பார்த்து தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசை பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கு வந்தது.

அப்படித் தான் அந்த வட மாநில நடிகையும் பெரிய முதலாளி மீது கண் வைத்துள்ளார்.

ஆசை

ஆசை

முதல் சீசன் முடிந்த கையோடு இரண்டாவது சீசனில் தான் கலந்து கொண்டே தீர வேண்டும் என்ற வெறியில் இருந்துள்ளார் அந்த நடிகை. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியை அணுகி தனது ஆசையை தெரிவித்துள்ளார். உங்களை தமிழகத்தில் யாருக்கும் அவ்வளவாக தெரியாது, உங்களுக்கு மொழியும் சரியாக வரவில்லை என்று கூறி நிராகரித்துள்ளனர்.

நிராகரிப்பு

நிராகரிப்பு

தொலைக்காட்சிக்காரர்கள் நிராகரித்தபோதும் மீண்டும் மீண்டும் முயன்றுள்ளாராம். அவர் ஒவ்வொரு முறை அணுகியபோதும் ஏதாவது காரணத்தை சொல்லி அவரை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது தான் அவர் ஏதோ குறுக்குவழியில் முயன்று தான் நினைத்ததை சாதித்து விட்டார்.

பெரிய முதலாளி

பெரிய முதலாளி

பெரிய முதலாளியின் செல்லக்குட்டி கண்டிப்பாக ஏதாவது பித்தலாட்டம் செய்து உள்ளே வந்திருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்தனர். அவர்கள் கூறியது உண்மையாகிவிட்டது. நடிகை ஏதோ செய்து பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அவருக்கு நெருக்கமானவர்களே தெரிவித்துள்ளனர்.

பித்தலாட்டம்

பித்தலாட்டம்

பெரிய முதலாளியோ அந்த நடிகையை காப்பாற்ற படாதபாடு படுகிறார். இதனாலேயே பெரிய முதலாளிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அவரையும், அந்த நடிகையையும் கலாய்த்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கை வலிக்கும் அளவுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர். முக்கியமான நாளான இன்று நடிகையின் குட்டு உடைந்துவிட்டது.

எப்படி?

எப்படி?

தமிழக மக்கள் பெரும்பாலானோருக்கு தெரியாத இந்த நடிகை எப்படி பெரிய முதலாளி வீட்டிற்கு வந்தார், அவரை ஏன் வெளியேற்றாமல் பித்தலாட்டம் செய்து எல்லாம் காப்பாற்றுகிறார்கள் என்று பார்வையாளர்களுக்கு சந்தேகம் எழாமல் இல்லை. இந்நிலையில் தான் நடிகையின் இந்த செயல் பற்றி தெரிய வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X