பழைய ஜோடிக்கு மீண்டும் கொக்கி போடும் ஒல்லி நடிகை.. கம்பேக் கொடுத்த நிலையில் கர்ச்சீப் போடுறாராம்!
சென்னை: கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த ஏகப்பட்ட நடிகைகளில் அந்த ஒல்லி நடிகையும் முக்கியமானவர்.
சினிமாவில் ஆரம்பத்தில் பெரிய புகழ், வெளிச்சம் கிடைத்த நிலையில், அதற்கு பிறகு மார்க்கெட்டை தக்க வைக்க முடியாமல் திணறி ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டார்.
அந்த நடிகையை போலவே அவருடன் இணைந்து நடித்து காணாமல் போன அந்த நடிகர் கம்பேக் கொடுத்துள்ள நிலையில், எப்படியாவது அவருடன் மீண்டும் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறாராம் நடிகை.

குடி போதை
சக்சஸ் வந்ததும் ஏகப்பட்ட பார்ட்டிகளில் கலந்து கொண்டு சரியான குடி போதைக்கு அந்த நடிகை அடிமையாகி விட்டது தான் அவரது வீழ்ச்சிக்கே காரணம் என்கின்றனர். அளவோடு எதையும் வைத்துக் கொண்டு சரியான படங்களை தேர்வு செய்து எந்தவொரு சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் தான் இங்கே சாதிக்க முடியும் என்பதை சற்று தாமதமாகவே இந்த நடிகையும் உணர்ந்து கொண்டு தற்போது முற்றிலுமாக மாறியுள்ளார் என கூறுகின்றனர்.

கிடைத்த பிரபலத்தையும்
சினிமாவில் சறுக்கலை சந்தித்த நிலையில், ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த பிரபலத்தை அந்த நடிகை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மீண்டும் மிஸ் பண்ணது தான் அவர் தற்போது கஷ்டப்பட காரணமே என்கின்றனர். மீண்டும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் வேண்டாம் என்று விட்டு விட்டார்.

தடுத்த ஈகோ
கண்டிப்பாக இப்போ அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பழையபடி பிரபலம் ஆக முடியுமா என்பது தெரியவில்லை என அறிந்து கொண்ட அந்த ஒல்லி நடிகை, தற்போது வரை இருக்கும் அந்த பழைய பெயரை அப்படியே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே வச்சு செய்ததே போதும், மீண்டும் வந்து பெயரை கெடுத்துக் கொள்ள தேவையில்லை என பணக் கஷ்டம் இருக்கும் போது அப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

கம்பேக் கொடுத்த ஜோடி
இந்நிலையில், அந்த நடிகையை போலவே அவருடன் இணைந்து நடித்த அந்த கிராமத்து மண் மனம் மாறாத நடிகருக்கும் பல படங்கள் சொதப்பி பெரும் கடனில் தத்தளித்து வந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்த நிலையில், வரிசையாக புதிய பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

நடிகருக்கு கொக்கி
இந்நிலையில், மீண்டும் ஒரு முறை எப்படியாவது அந்த நடிகருடன் இணைந்து நடித்து ஹிட் அடித்து விட வேண்டும் என அந்த நடிகை கொக்கி போட்டு வருவதாக பரவலாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய சீக்கிரமே இருவரும் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் வரும் என பரவலான பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. இருவருக்கும் நல்லது நடந்தால் சரி!


Click it and Unblock the Notifications











